கால பால பைரவர் கோயில், திருவைரவன்பட்டி

திருவைரவன்பட்டி கால பால பைரவர் கோயில் தென்னிந்தியாவில் வைரவருக்கான முதற் கோயிலாக திருக்கோட்டியூர் அருகே திருவைரவன்பட்டியில் உள்ளது. சிவகங்கை சமத்தான தேவத்தான நிர்வாகத்திற்கு உட்பட்டது. தட்சிண காசி எனவும் அழைக்கப்படுகிறது.

திருப்பத்தூர் - சிவகங்கை சாலையில் திருப்பத்தூரிலிருந்து 7வது கிலோமீட்டரில் அமைந்துள்ள இத்தலத்தில் குடிகொண்டுள்ள திரு மூல பால‌ கால பைரவர்  சேர, சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் நாயக்க மன்னர்களாலும்,  கோவிந்தப்ப தீட்சிதர் போன்ற மகான்களாலும் வழிபடப்பட்டவர். மன்னர்கள் போருக்குச் செல்லும் முன் போரில் வெற்றி வேண்டி இங்குள்ள வைரவரை வழிபட்டுச் சென்றதாக நம்பப்பட்டது. இத்தலம் முசுகுந்த சக்கரவரத்தி, அஷ்ட நாகர்களால் வணங்கப்பட்டது என்பதும் வரலாறு. 

பிரதி மாதம் தேய்பிறை அட்டமி அன்று திருவைரவன்பட்டியில் பைரவர் வழிபாடு, திருமுறை, திருமறை, தெய்வீக இசைக்கருவிகள் ஆகியவை முழங்க காலபைரவ யாகத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாதத்தில் இந்த ஒரு நாள் மட்டும் இவ்வூர் திருவிழா கோலம் கொள்ளுகிறது.