காளிகா பிரசாத் பட்டாச்சார்யா

காளிகா பிரசாத் பட்டாச்சார்யா (11 செப்டம்பர் 1970 – 7 மார்ச்சு 2017)[2] ஒரு இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். அசாம் மாநிலத்தின் சில்ச்சார் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். ஜாதவ்பூர் பல்கலையில் ஒப்பிலக்கியம் குறித்த கல்வியைப் பயின்றார். இவரது உறவினரான ஆனந்த பட்டாச்சார்யா இசைத்துறையில் இவரது முன்னோடியோகத் திகழ்ந்தவர் ஆவார்.[3] 1999ம் ஆண்டில், கிழக்கு மற்றும் வடக்கு வங்காளத்தின் இசைப் பாரம்பரியத்தை மீ்ட்டெடுக்கும் டோஹர் குழுமத்தை நிறுவனர்களில் இவரும் ஒருவர் ஆவார். இவர், திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். புபான் மாஜி(2017) என்பது இவர் இசையமைத்த கடைசி திரைப்படமாகும். ஜீ வங்காள தொலைக்காட்சி பிரபல இசைநிகழ்ச்சியான சரி கம ப நிகழ்ச்சியில் இணைந்தார்.

காளிகா பிரசாத் பட்டாச்சார்யா
2016 ல் பட்டாச்சார்யா
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்কালিকা প্রাসাদ ভট্টাচার্য
பிறப்பு(1970-09-11)11 செப்டம்பர் 1970
சில்ச்சார், அசாம், இந்தியா[1]
இறப்பு7 மார்ச்சு 2017(2017-03-07) (அகவை 46)
குராப்,ஹூக்ளி மாவட்டம் , மேற்கு வங்கம், இந்தியா
இசை வடிவங்கள்நாட்டுப்புறவியல்
தொழில்(கள்)பாடகர்
இணையதளம்doharfolk.com

வாழ்க்கை மற்றும் பணிகள்

தொகு

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

அசாமின் சில்சாரில் உள்ள பட்டாச்சார்யாவின் வீட்டில் இசை என்பது ஒரு உள்ளார்ந்த பகுதியாக இருந்தது. தாளம் மற்றும் இசைக்கு மத்தியில் வளர்ந்ததால்து, இளம் வயதிலேயே தபேலா வாசிக்கக் கற்றுக்கொள்வது என்பது இவருக்கு குழந்தை தனது முதல் அடியை எடுத்து வைப்பது போல இயல்பாக நடந்தது. தபேலா மீதான அவரது ஈர்ப்பு படிப்படியாக அவரை பல்வேறு இன தாளங்களை நோக்கித் தள்ளியது. தபேலா வாசிக்கக் கற்றுக்கொண்டபோது, குரல் இசையிலும் பயிற்சி பெற்றார். இசையின் மீதான இவரது தீவிர ஆர்வம் இறுதியில் இவரை வங்காள மற்றும் வடகிழக்கு இந்தியாவின் நாட்டுப்புற இசையின் பக்கம் சாய்த்தது. எனவே, பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல்களைத் தேடத் தொடங்கினார். 1995 இல், அவர் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கியத் துறையில் சேர்ந்தார். 1998 ஆம் ஆண்டில், நாட்டுப்புற இசைக்கலைக்கான இந்திய அறக்கட்டளையின் ஆராய்ச்சி மானியம் பெற்று பெங்களூர் சென்றார்.[4]

தோஹர் இசைக்குழு

தொகு
 
இசைநிகழ்ச்சி ஒன்றில் பட்டாச்சார்யா

பட்டாச்சார்யா 1999 ஆம் ஆண்டு தோஹர்[5] என்ற நாட்டுப்புற இசைக்கலைஞர்களின் குழுவை உருவாக்கினார்.1999ம் ஆண்டில்,தன்னுடைய தனித்துவமான இயக்கத்தின் மூலம், பல கவனிக்கப்படாத நாட்டுப்புற பாடல்களை மக்களைச் சென்றடையும் வகையில் பிரபலமாக்கினார். தோஹர் குழுவின் இசை நிகழ்ச்சிகள் தனித்துவமானவையாக விளங்கின. இவர்களது இசைநிகழ்ச்சிகள் நகர மக்களின் கடைமை, ஆய்வு, பொழுதுபோக்கு ஆகியவற்றிலிருந்து பிரிக்க முடியாத உணர்வுபூர்வமானதாக மாறியது. தோஹர் இசைக்குழு ஒன்பது ஆல்பங்களை வெளியிட்டுள்ளது.

இசைப்பணி

தொகு

பட்டாச்சார்யா ஹிந்தி மற்றும் பெங்காலி திரைப்படங்களில் சில பின்னணிப் பாடல்களைப் பாடியுள்ளார். அசோக் விஸ்வநாதன் இயக்கிய கும்ஷுதா என்ற ஹிந்தி திரைப்படத்தில் பாடல்கள் பாடியுள்ளார். 2007 ஆம் ஆண்டில், சுமன் முகோபாத்யாய் இயக்கிய பெங்காலி திரைப்படமான சதுரங்கா என்னும் திரைப்படத்தில் பாடியுள்ளார். 2008 ஆம் ஆண்டில், கவுதம் கோஸ் இயக்கிய இந்தியா-வங்கதேச கூட்டுத் திட்டமான மோனர் மனுஷ் என்ற பெங்காலி திரைப்படத்திற்காக இவர் பாடியுள்ளார். இது. ஃபகிர் லாலன் ஷாவின் வாழ்க்கை மற்றும் தத்துவத்தின் மீது சுனில் கங்கோபாத்யாய் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் வங்காளத் திரைப்படமாகும். 2012 ஆம் ஆண்டில், பட்டாச்சார்யா பல்வேறு ஆராய்ச்சி சார்ந்த கட்டுரைகளை எழுதினார், அவை பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டன. நந்திகர், கல்யாணி நாட்டிய சர்ச்சா மற்றும் திரிதியோ சூத்ரோ போன்ற புகழ்பெற்ற நாடகக் குழுக்களுக்கும் பட்டாச்சார்யா இசையமைத்துள்ளார்.

பல பிரபலமான பெங்காலி மற்றும் ஹிந்தி திரைப்படங்களின் பின்னணி பாடகராய் இருந்ததைத் தவிர, சோவன் தரஃப்தார் இயக்கிய "செல்பி" போன்ற படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.[6]

விருதுகள்

தொகு
  • 2013 இல் மேற்கு வங்காள அரசாங்கத்திடமிருந்து "சங்கீத் சம்மான் விருதை" பெற்றார்.
  • 2013 இல் குவஹாத்தியில் உள்ள பைடிக்ராம் குழுமத்திடமிருந்து வடகிழக்கு கலாச்சாரத் தூதுவர் விருதைப் பெற்றார்.

இறப்பு

தொகு

ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள குராப் கிராமத்திற்கு அருகே 46 வயதில் 7 மார்ச் 2017 அன்று நடந்த சாலை விபத்தில் பட்டாச்சார்யா மரணமடைந்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Kalika Prasad: Music from the periphery falls silent". Newsmen. March 7, 2018 இம் மூலத்தில் இருந்து ஜனவரி 29, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180129030531/http://www.newsmen.in/news-item/kalika-prasad-music-from-the-periphery-falls-silent/. பார்த்த நாள்: April 22, 2017. 
  2. ""Bhuban Majhi" screening today". The Daily Star. 11 September 2017. http://www.thedailystar.net/arts-entertainment/tv/bhuban-majhi-screening-today-1460164. பார்த்த நாள்: 11 September 2017. 
  3. "Kalikaprasad on his Life with the Soil". showvelvet.com. Sep 15, 2016 இம் மூலத்தில் இருந்து மார்ச் 7, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170307204919/http://showvelvet.com/pc/blog-detail.php?id=81. பார்த்த நாள்: March 7, 2017. 
  4. "India Foundation for the Arts".
  5. "Dohar". Archived from the original on 2019-01-16. பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.
  6. "Films » Selfie". Archived from the original on 2017-04-27. பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.