காளிங்க நர்த்தனம்

காலிங்க நர்த்தனம் என்பது வைணவக் கடவுளான கிருஷ்ணன், யமுனை ஆற்றில் வாழ்ந்துவந்த காலிங்கன் எனும் நாகத்தின் மீது ஆடிய நடனத்தினைக் குறிப்பதாகும். காளிங்கன் யமுனை நதியில் தன் விஷத்தினைக் கக்கி அந்த ஆறு முழுமையும் விஷமாக ஆக்கியதென்றும், பூப்பந்து விளையாடிய கிருஷ்ணன் யமுனையில் விழுந்த பந்தினை எடுக்க சென்ற போது, காலிங்கனுடன் சண்டையிட்டு, அதன் மேல் நடனமாடியதாக நம்பப்படுகிறது. இந்த நர்த்தனத்தினை சிற்பமாக சைவ வைணவக் கோவில்களில் காணலாம். [1]

தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள காளிங்க நர்த்தனத்தை குறிக்கும் புடைப்புச் சிற்பம்.


ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கடசுப்பையர் ஸ்ரீ கிருஷ்ணகானம் என்ற பாடல்களின் தொகுப்பில் இந்த காலிங்க நர்த்தனத்தினைப் பற்றி பாடல் இயற்றியுள்ளார்.[2]

காண்க தொகு

ஆதாரம் தொகு

  1. http://www.mazhalaigal.com/2010/may/20100518ag_kaalinga.php#.UahAXtIwdnI
  2. Kalinga Narthana Thillana - காணொலி
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிங்க_நர்த்தனம்&oldid=3801587" இலிருந்து மீள்விக்கப்பட்டது