காளிதாசு குப்தா ரிசா
காளிதாசு குப்தா ரிசா (Kalidas Gupta Riza) இந்தியாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார்.[1] உருது மொழிக் கவிஞர் மிர்சா காலிப்பின் எழுத்துக்களின் மீது அதிகாரம் பெற்றவராகவும் இவர் அறியப்படுகிறார்.[2] மிர்சா காலிப் பற்றிய பல புத்தகங்களை குப்தா ரிசா எழுதியுள்ளார்.[3] இதற்காக 1987 ஆம் ஆண்டு காலிப் விருதையும் பெற்றார்.[4] இந்திய அரசாங்கம் 2001 ஆம் ஆண்டு நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது.[5] 1995 ஆம் ஆண்டு காளிதாசு குப்தா ரிசா வெளியிட்ட காலிபின் திவான் திவான்-இ-ராசா என்ற பதிப்பு காலிபின் உருது கவிதையின் மிகவும் விரிவான மற்றும் காலவரிசைப்படி அமைந்த சரியான பதிப்பாகும். இம்தியாசு அலியின் 1958 ஆம் ஆண்டு பதிப்பான அர்சிக்கு மாற்றாக இது அமைந்தது.[6]
காளிதாசு குப்தா ரிசா Kalidas Gupta Riza | |
---|---|
பிறப்பு | 1925 இந்தியா |
இறப்பு | 2001 |
பணி | எழுத்தாளர் |
விருதுகள் | பத்மசிறீ காலிப் விருது |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Library of Congress". Library of Congress. 2014. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.
- ↑
- "Dawn". Dawn. 2014. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.
- "Ghalibkaarvaan". Ghalibkaarvaan. 2014. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.
- ↑
- "University of Chicago". University of Chicago. 2014. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.
- "Alibris". Alibris. 2014. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.
- Profile on Amazon. Amazon.
- ↑ "Ghalib Institute". Ghalib Institute. 2014. Archived from the original on 11 August 2014. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.
- ↑ *"Padma Awards" (PDF). Padma Awards. 2014. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
- ↑ Gopi Chand Narang (2017). Ghalib: Innovative Meanings and the Ingenious Mind. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199091515.
.