காழகம்
காழகம் என்பது இக்காலத்துப் பர்மா [1]
மலாய் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள கெடா என்னும் மலைப் பகுதியே கடாரம் என்பர். [2]
காவிரிப்பூம்பட்டினம் என்னும் புகார்த் துறைமுகத்தில் கரிகாலன் ஆட்சிக் காலத்தில் வந்து இறங்கிய பொருள்கள் தெருக்களில் நாட்டின் பெயர் பொறித்த கொடிகள் கட்டப் பட்டுக் குவிந்து கிடந்தன. அவற்றில் ஒன்று “காழகத்து ஆக்கம்”. [3]
காழகம் என்பது கரை போட்ட ஆடை. [4]
அதனை மடிசெய்து கச்சமாகக் கட்டி [5] ஆண்களும் [6] பெண்களும் [7] அணிந்துகொண்டனர்.
மேற்கோள்
தொகு- ↑ காழகம் (இன்றைய பர்மா)[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ சங்ககாலக் காழகம் வேறு. இராசேந்திர சோழன் வென்ற கடாரம் வேறு.
- ↑ அவற்றின் பாதுகாப்பு தெய்வ-நம்பிக்கையில் அமைந்துகிடந்தது. கடல்வழியே வந்த பரி, வண்டியில் வந்த மிளகு மூட்டைகள், வடமலையில் பிறந்த மணிகள், பொன்கள், குடமலையில் பிறந்த சந்தனக்கட்டைகள், தென்கடல் முத்து, கிணகடல் பவளம், கங்கைநீரில் விளைந்தவை, காவிரி நீரில் விளைந்தவை, ஈழநாட்டு உணவுப்பொருள், காழக-நாட்டு ஆக்கச்செல்வம் – ஆகிய பல வளங்கள் சிறியவும் பெரியவுமாக வந்து இறங்கிக் குவிக்கப்பட்டிருந்தன. பட்டினப்பாலை –185-192.
- ↑ கரையிடைக் கிழிந்த நின் காழகம் கலித்தொகை 73-17
- ↑ கதுப்பு விரித்து அன்ன காழக நுணங்கறல் சிபுபாணாற்றுப்படை 6
- ↑ காழக ஆடையை ஏரகம் எனப்பட்ட சுவாமிமலையில் குடிகொண்டுள்ள முருகனுக்குப் படையல் செய்வோர் அணியதிருந்தனர். திருமுருகாற்றுப்படை 184
கோவூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடும்போது தான் கண்ட கனவைப்பற்றிக் குறிப்பிடுகையில் “காழகம் நீப்பவும்” கனவு கண்டதாகக் குறிப்பிடுகிறார். புறம் 41
காழகம் வீங்கக் கட்டி கலித்தொகை 7-9
கண்ணகியின் முன் தோன்றி விலகிய பூதங்களில் ஒன்று “ஒண்ணிறக் காழகம் சேர்ந்த உடை” அணிந்தஅருந்தது (சிலப்பதிகாரம் அழற்படு காதை) - ↑ தலைவன் நலத்தை 7 பரத்தையர் கவர்ந்து உண்டார்களாம். 1 செயலமை மாலையை நகையாக அணிந்தவள். 2 தொருவில் வளையலை வீசிக்கொண்டு நடந்தவள், 3 முத்தைப் பொட்டாக ஒட்டிக்கொண்டிருந்தவள், 4 காதிலே குழை அணிந்தவள், 5 அல்குலில் காழகம் அணிந்தவள், 6 முத்து ஞெகிழம் ((சிலம்பு) அணிந்தவள், 7 புலவியால் புல்லாது இருந்தவள் - கலித்தொகை 92-37