காவலூர் முருகன் கோயில்
காவலூர் முருகன் கோயில், இந்தியா, தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள முருகன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
அமைப்பு
தொகுசண்முகசுப்பிரமணியசுவாமி கோயில் என்றழைக்கப்படுகின்ற இக்கோயில் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற கோயிலாகும். சற்றே உயர்ந்த தளத்தில் அமைந்துள்ள இக்கோயில் கருவறை, விமானம் உள்ளிட்ட அமைப்புகளுடன் உள்ளது. கோயிலில் பலிபீடம், நந்தி உள்ளன. கோயிலின் முன் மண்டபத்தில் விநாயகர், சந்திரன், சூரியன், வல்லவநாதர், அருணகிரிநாதர், அங்காரஹன் உள்ளிட்டோர் உள்ளனர். ஆறுபடை வீடுகளைச் சேர்ந்த முருகனின் திருவுருவங்கள் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.