காவல் நிலையம்

காவல் நிலையம்[1] என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சட்டம், ஒழுங்கு, குற்றம் நீக்கல், போக்குவரத்து சீர்செய்யப்பட காவல் ஆய்வாளர் தலைமையில் செயல்படும் ஓர் அலுவலகம் ஆகும்.

காவல் நிலையத்தின் உயர் அதிகாரியாக காவல் ஆய்வாளர் செயல்படுகிறார். அவருக்கு உதவியாக உதவி காவல் ஆய்வாளர்கள் சிலர் பொறுப்பில் உள்ளனர். தலைமைக் காவலர்கள், எழுத்தர் மற்றும் சில காவலர்கள் மற்ற அலுவலர்களாக, அலுவலகத்தின் உள்ளேயும், வெளியிலும் பணியாற்றுகின்றனர்.

போக்குவரத்தை சீர் செய்ய, அதற்கென தனிப்பிரிவு காவல் அதிகாரிகள், காவலர்கள் செயல்படுகின்றனர்.

2023 ஆம் ஆண்டு சனவரி 26 ஆம் நாள் குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு காவல் நிலையங்களில், திருப்பூர் வடக்கு காவல் நிலையம் முதலாவதாகவும், திருச்சி கோட்டை காவல் நிலையம் இரண்டாவது சிறந்த காவல் நிலையமாகவும், திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் மூன்றாவது சிறப்பான காவல் நிலையமாகவும் திகழ்ந்தன.[2]

காவல் நிலையத்தில் ஆண், பெண் என இருபாலரும் பணிபுரிந்தாலும், முழுமையும் பெண்களே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் நிறைய உள்ளன. தமிழ்நாட்டில் முதன் முதலாக 1974 ஆம் ஆண்டு, பெண்கள் காவல்துறையில் பணியாற்றத் தொடங்கினர். 1992 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு காவல் நிலையம், பெண் ஆய்வாளர், மூன்று உதவி பெண் ஆய்வாளர்கள், ஆறு பெண் தலைமைக் காவலர்கள் மற்றும் இருபத்துநான்கு பெண் காவலர்கள் என முழுவதும் பெண்களாக, அனைத்து மகளிர் காவல் நிலையம் என‌ உருப்பெற்றது.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவல்_நிலையம்&oldid=3725619" இருந்து மீள்விக்கப்பட்டது