காவேரிப்பட்டிணம் சக்தி விநாயகர் கோயில்
காவேரிப்பட்டிணம் சக்தி விநாயகர் கோயில் என்பது கிருட்டிணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலாகும். இக்கோயில் காவேரிப் பட்டிணம் பேருந்து நிலையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது. இக்கோயில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருஷ்ணகிரி |
அமைவிடம்: | காவேரிப்பட்டிணம் |
மக்களவைத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | காலபைரவர் |
சிறப்புத் திருவிழாக்கள்: | விநாயகர் சதுர்த்தி |
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயில் முன் மண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது. இக்கோயில் ஐந்து நிலை விமானத்தைக் கொண்டுள்ளது. கோயில் கருவறையில் மூன்றடி உயர பிள்ளையார் சிலை அமைந்துள்ளது.
விழாக்கள்
தொகுஇக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அப்போது மூன்று நாட்கள் விழா நடத்தப்படுகிறது. மூன்றாம் நாளில் தேர்த் திருவிழா நடத்தப்படுகிறது. பொங்கல் திருநாளன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. [1]