காவேரி கச்சாரி
கபேரி கச்சாரி (Kaveri Kachari) ஓர் எழுத்தாளர், கவிஞர், அரசியல் மற்றும் பொருளாதாரப் பேச்சாளர் ஆவார். இவர் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி, உல்பா எனப்படும் அமைதிப் பேச்சு செயல்முறை அமைப்பின் தலைவரான அரபிந்தா ராஜ்கோவாவின் மனைவி ஆவார்.[1][2] கல்லூரி நாட்களிலிருந்தே கவிதைத் திறமைக்காக கச்சாரி அறியப்பட்டவர்.[3][4]
காவேரி கச்சாரி | |
---|---|
துணைவர் | அரபிந்தா ராஜ்கோவா |
பிள்ளைகள் | கம்செங் ராஜ்குமாரி (மகள்) கதாதர் (மகன்) |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு1980களின் பிற்பகுதியில், இவர் குவகாத்தி பல்கலைக்கழகத்தில் மாணவியாக இருந்தபோது, அரபிந்தா ராஜ்கோவாவை மணந்தார். இவர்கள் திருமணத்தின் ஆரம்ப நாட்களை அசாம் மற்றும் பூடான் காடுகளில் கழிக்க வேண்டியிருந்தது.[4] இவர்களுக்கு கம்செங் ராஜ்குமாரி (மகள்) மற்றும் கதாதர் (மகன்) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.[1][4]
கைது
தொகுகச்சாரி, தனது கணவர் ராஜ்கோவா, துணை சி-இன்-சி ராஜு பருவா மற்றும் ராஜ்கோவாவின் மெய்க்காப்பாளர் ராஜா போரா ஆகியோருடன் 4 திசம்பர் 2009 அன்று காலை மேகாலயாவில் உள்ள இந்திய-வங்காளதேச எல்லைக்கு அருகில் எல்லைப் பாதுகாப்புப் படையிடம் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.[2] இவர் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லாததால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.[2] இவரும் மற்ற பெண்களும் அவர்களது சிறார்களுடன் குவகாத்தியில் உள்ள 4வது அசாம் காவல்துறை படைப்பிரிவின் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டனர்.[1]
குடும்ப பாதுகாப்பு
தொகுராஜ்கோவாவின் மூத்த சகோதரர் அஜய் ராஜ்கோன்வார், 97 வயதான அவர்களின் தாயார் இவர்களைச் சந்திக்கும் வகையில், தனது சகோதரரின் குடும்பத்தைத் தங்கள் பாதுகாப்பில் வைக்க விரும்புவதாகக் கூறியதாகக் கூறப்படுகிறது. "காவேரி மற்றும் இரண்டு குழந்தைகளை -- 13 வயது மகள் மற்றும் ஐந்து வயது மகன் -- சிப்சாகரில் உள்ள லக்வாவில் உள்ள தங்கள் தாயிடம் அழைத்துச் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். கச்சாரி மேற்கொண்டு அமைப்பு ரீதியாக வேலை செய்ய விரும்பினால் தாங்கள் எதுவும் சொல்ல முடியாது," என்று அஜய் செய்தியாளர்களிடம் கூறினார்.[5]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "ULFA kids don't know they are Assamese Hindu". Hindustan Times. 7 Dec 2009. பார்க்கப்பட்ட நாள் 9 December 2009. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 2.2 Karmakar, Rahul (5 December 2009). "ULFA boss Rajkhowa, aides produced in Guwahati court". Hindustan Times. Archived from the original on 5 January 2010. பார்க்கப்பட்ட நாள் 9 December 2009.
- ↑ "The moderate face of ULFA". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 December 2009. Archived from the original on 16 September 2011. பார்க்கப்பட்ட நாள் 9 December 2009.
- ↑ 4.0 4.1 4.2 Hussain, Syed Zarir (3 December 2009). "Rajkhowa: One of India's most wanted". Express buzz. Archived from the original on 11 May 2012. பார்க்கப்பட்ட நாள் 9 December 2009.
- ↑ PTI (6 Dec 2009). "Arabinda Rajkhowa's brother wants to take custody of wife and children". DNA India. பார்க்கப்பட்ட நாள் 10 December 2009.