காஸ்மோட்ரான்

காஸ்மோட்ரான் என்பது ஒரு துகள் முடிக்கி ஆகும். குறிப்பாக அது புரோட்டானை முடுக்குவிக்க பயன்படுகிறது. 1948 ஆம் ஆண்டு அமெரிக்க அணுசக்தி கமிஷன் அனுமதியோடு ப்ரூஹேவன் தேசிய ஆய்வகத்தில் ஆரம்பிக்கப்பட்டு 1953 ஆம் ஆண்டு அதிகபட்ச ஆற்றலை வழங்கியது. 1968 வரை சிறப்பாக செயல்பட்டது. ஜிகா எலக்ட்ரான் வோல்ட் அளவுக்கு இயக்க ஆற்றலை கொடுத்த முதல் துகள் முடுக்கி இதுவாகும். முடுக்கப்பட்ட புரோட்டானிலிருந்து 3.3 ஜிகா எலக்ட்ரான் வோல்ட் இயற்ற ஆற்றல் உருவானது. முடுக்கப்பட்ட துகள்களை துகள் முடுக்கியிலிருந்து துகள் கற்றைகளாக வெளியே கொண்டுவந்து மற்ற சோதனைகளுக்கு பயன்படுத்திய முதல் துகள் முடுக்கி காஸ்மோட்ரான். காஸ்மிக் கதிர்களிலிருந்த மெசான்களை நேரடியாக கண்காணிக்க உதவிய துகள்முடிக்கி இது. முதன் முதலில் கனமான நிலையற்ற துகள்களை கண்டுபிடிக்க உதவியதும் இந்த காஸ்மோட்ரான் தான்.

காஸ்மோட்ரான் வரைபடம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஸ்மோட்ரான்&oldid=3523082" இலிருந்து மீள்விக்கப்பட்டது