காியன் சோலா தேசியப் பூங்கா

தேசியப் பூங்கா

கரியன் சோலா தேசியப் பூங்கா (Karian Shola National Park) இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.1989 ஆம் ஆண்டு கரியன் சோலா தேசியப் பூங்கா ஒரு தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

கரியன் சோலா தேசியப் பூங்கா
Karian Shola National Park
Map showing the location of கரியன் சோலா தேசியப் பூங்கா Karian Shola National Park
Map showing the location of கரியன் சோலா தேசியப் பூங்கா Karian Shola National Park
அமைவிடம்தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்10°23′N 77°5′E / 10.383°N 77.083°E / 10.383; 77.083

மேற்கு தொடர்ச்சி மலைகள் இந்தியாவின் மேற்கு திசையில் 30 முதல் 50 கிமீ நீளத்திற்கு கடற்கரைக்கு இணையாக உயர்ந்திருக்கும் மலைகளின் சங்கிலியாகும். இவை உண்மையான மலைகள் அல்ல. இந்தியத் துணைக் கண்டம் கோண்ட்வானா நிலத்திலிருந்து பிரிந்ததால் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலப்பகுதி விளிம்புகளாகும். இமயமலை மலைத்தொடரை விட பழமையான மேற்கு தொடர்ச்சி மலைகளின் மீது பழங்காலக் காடுகள் பரவியுள்ளன.[1] நாட்டிற்குள் வரும் பருவமழை புயல் போன்ற புவியியல் அமைப்புகளை மேற்கு தொடர்ச்சி மலைகள் இடைமறிப்பதால் இந்தியாவின் வானிலை பாதிக்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழையின் போது சூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் அதிக மழை பெய்யும். ஆனால், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைந்த அளவு மழை பொழிகிறது. மேற்கு தொடர்ச்சி மலை யுனெசுகோவின் உலக பாரம்பரிய தளமாகும். மேலும் இம்மலை உலகின் உயிரியல் பன்முகத்தன்மையின் எட்டு மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[2]

கரியன் சோலா தேசியப் பூங்கா மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு முனையில், ஆனைமலை மலைகளில் அமைந்துள்ளது. அட்சரேகை 10°13.2' முதல் 10°33.3´வடக்கு மற்றும் தீர்க்கரேகை 76 ° 49.3' முதல் 77 ° 21.4'கிழக்கு என்ற புவியியல் ஒருங்கிணைப்புகளில் பூங்கா அமைந்துள்ளது.

யுனெசுகோ உலகப் பாரம்பரியத் தளம் தொகு

 
சோலா காடு மற்றும் மலைநாட்டு புல்வெளி

மேற்கு தொடர்ச்சி மலை 2012 ஆம் ஆண்டு உலக பாரம்பரியத் தளமாக மாறியது.கரியன் சோலாவைத் தவிர, தமிழ்நாட்டில் உள்ள ஆணைமலை துணை தொடரில் கிராசு மலைகள் தேசியப் பூங்கா மற்றும் முக்கூர்த்தி தேசியப் பூங்கா ஆகிய இரண்டு தேசிய பூங்காக்கள் சேர்ந்துள்ளன. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், சிறீவில்லிப்புத்தூர் நரைத்த அணில் வனவிலங்கு சரணாலயம் மற்றும் திருநெல்வேலி வடக்கு வனப்பிரிவு ஆகிய மூன்று பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் கூடுதலாக மேற்குத் தொடர்ச்சிமலையில் சேர்ந்துள்ளன. இந்த பகுதிகள் அனைத்தும் முன்னதாக இந்தியாவின் 1980 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மற்றும் வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டன.

யுனெசுகோ பட்டியலில் இப்பகுதி சேர்க்கப்படுவதால் புதியதாக எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்கக்கூடாது என்று மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் மக்களுக்கு அப்போது கூறப்பட்டது. இப்பகுதி உலக பாரம்பரிய களமாக மாறுவதற்கு முன்னர் இருந்த அவசிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் பாரம்பரிய களஅறிவிப்புக்குப் பின்னரும் சட்டப்பூர்வமானவையாகவேத் தொடரும் என்றும் அவர்களுக்குக் கூறப்பட்டது.[3]

இப்பாரம்பரிய களத்தின் உயர் மலைவாழிட வன சுற்றுச்சூழல் அமைப்புகள் இந்திய பருவமழை வானிலை முறையை பாதிக்கின்றன" என்று உலக பாரம்பரியக் குழு கூறியது. மேலும் இப்பகுதியின் வெப்பமண்டல காலநிலையை மிதமானதாக நிர்வகிப்பதன் மூலம், பூமியின் பருவமழை முறையின் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் இருப்பதாகவும் அது தெரிவிக்கிறது. உலகளவில் அச்சுறுத்தலுக்கு ஆளான 325 தாவரங்களுக்கும், விலங்குகள், பறவைகள், ஊர்வன, மற்றும் மீன் இனங்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகள் புகலிடமாக உள்ளன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "The Western Ghats: Geological History". 29 July 2008. பார்க்கப்பட்ட நாள் 3 November 2015.
  2. 2.0 2.1 "Western Ghats". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 3 November 2015.
  3. Sudhi, K.S. (3 July 2012). "Heritage tag not to hit life on the Ghats". The Hindu. http://www.thehindu.com/news/national/kerala/heritage-tag-not-to-hit-life-on-the-ghats/article3594879.ece.