கா. ரஹ்மான்கான்

இந்திய அரசியல்வாதி

கா.ரஹ்மான்கான் (K. Rahman Khan) இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதி மற்றும் முன்னாள் சிறுபான்மை விவகார அமைச்சர் மற்றும் மாநிலங்களவையின் முன்னாள் துணைத் தலைவரும் ஆவார்.[1] ,[2]

பிறப்புதொகு

கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தின் கிருஷ்னராஜ் பேட் நகரில் காசிம் கான், கைருன்னிஸா தம்பதியருக்கு மகனாக 1939 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆம் நாள் ரஹ்மான் கான் பிறந்தார்.

கல்விதொகு

வணிகவியல் இளங்கலை (B.Com), மற்றும் பட்டய கணக்காளர் (FCA) படிப்பினை மைசூர் பல்கலைக்கழகத்தில் படித்தவர். கர்நாடக மாநிலத்தில் முதல் முஸ்லீம் பட்டய கணக்காளர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

விருதுகள்தொகு

 • லக்னோவில் உள்ள இன்டெக்ரல் பல்கலைகழகம் சமூக ஒற்றுமைக்கு பாடுபட்டமைக்காக இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.[3]
 • கூட்டுறவுத்துறையை மேம்படுத்தியதற்க்காக கர்நாடக அரசின்சார்பில் சாகர ரத்னா விருது வழங்கி கவுரவித்துள்ளது.[4]
 • கர்நாடக அரசின்சார்பில் கல்வி மேம்பாட்டிற்க்காக திப்பு சுல்தான் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

பதவியில்தொகு

 • 1978-90 கர்நாடக சட்டமன்றம் உறுப்பினர்.
 • 1982-84 கர்நாடக சட்டமன்றம் தலைவர்.
 • 1993-94 தலைவர், கர்நாடக மாநில சிறுபான்மையினர் ஆணையம் (அமைச்சர் பதவி).
 • ஏப்ரல் 1994 மாநிலங்களவையில் உறுப்பினர், (முதல் தவணை).
 • 1995-96 நாடாளுமன்ற உறுப்பினர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு, சுற்றுச்சூழல் மற்றும் வன உறுப்பினர், வெளிவிவகாரக் குழு
 • 1996 ஒருங்கிணைப்பாளர், கொங்கன் ரயில்வே நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு.
 • 1996-97 உறுப்பினர், நிதி நிலைக்குழு.
 • அக்டோபர் 1996 - டிசம்பர் 1997 மற்றும் ஜூலை 2001 - பிப்ரவரி 2004 உறுப்பினர், வக்ஃப் வாரியங்களின் செயல்பாடு தொடர்பான கூட்டு நாடாளுமன்றக் குழு.
 • 1996-99 உறுப்பினர், ரயில்வே வேகன்களுக்கான தேர்வுக் குழு, மாநிலங்களவை.
 • ஜனவரி 1999 - ஏப்ரல் 1999 வக்ஃப் வாரியங்களின் செயல்பாடு குறித்த கூட்டு நாடாளுமன்றக் குழுத் தலைவர்.
 •  டிசம்பர் 1999 - 2001 நிதிக் குழு உறுப்பினர்.
 • டிசம்பர் 1999 - 2003 பொது கணக்குகளுக்கான குழு உறுப்பினர்.
 • ஏப்ரல் 2000 மாநிலங்களவையில் உறுப்பினர் (இரண்டாவது தவணை).
 • மே 2000 - ஜூலை 2004 மாநிலங்களவை இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் துணைத் தலைவர்.
 • ஏப்ரல் 2001- 2002 உறுப்பினர், பங்குச் சந்தை மோசடி தொடர்பான கூட்டு நாடாளுமன்றக் குழு.
 • ஜூலை 2001 - பிப்ரவரி 2004 உறுப்பினர், வக்ஃப் வாரியங்களின் செயல்பாடு தொடர்பான கூட்டு நாடாளுமன்றக் குழு.
 • 2002 - பிப்ரவரி 2004 உறுப்பினர், போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரக் குழு.
 • மே 2004 - 20 ஜூலை 2004 இரசாயன மற்றும் உர அமைச்சகத்தில் மாநில அமைச்சர்.
 • 22 ஜூலை 2004 - 2 ஏப்ரல் 2006 மற்றும் 12 மே 2006- 2 ​​ஏப்ரல் 2012 மாநிலங்களவை துணைத் தலைவர்.
 • ஏப்ரல் 2006 மாநிலங்களவையில் உறுப்பினர் (மூன்றாவது தவணை)
 • ஆகஸ்ட் 2004-ஏப்ரல் 2006 மற்றும் மே 2006 வணிக ஆலோசனைக் குழு உறுப்பினர்.
 • செப்டம்பர் 2004 - ஏப்ரல் 2006 மற்றும் மே 2006 தலைவர், சலுகைகள் குழு, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு கணினி உபகரணங்கள் வழங்குவதற்கான குழு, நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் குழு (மாநிலங்களவை)
 • 2005 - 06 காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் (சிபிஏ) நிர்வாகக் குழுவின் பிராந்திய பிரதிநிதி
 • ஆகஸ்ட் 2005 - ஏப்ரல் 2006 மற்றும் மே 2006 பொது நோக்கங்கள் குழு உறுப்பினர், விதிகள் குழு உறுப்பினர்.
 • அக்டோபர் 2005 - ஏப்ரல் 2006, மே 2006 - மே 2009 மற்றும் ஜனவரி 2010 - ஏப்ரல் 2012 துணைத் தலைவர், நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான நாடாளுமன்ற மன்றம் குழு.
 •  பிப்ரவரி 2006 - மே 2009 மற்றும் ஜனவரி 2010 - ஏப்ரல் 2012 துணைத் தலைவர், குழந்தைகள் தொடர்பான நாடாளுமன்ற குழு, இளைஞர்கள் தொடர்பான நாடாளுமன்ற குழு.
 • ஜூலை 2006 - மே 2009 மற்றும் ஜனவரி 2010 - ஏப்ரல் 2012 துணைத் தலைவர், மக்கள் தொகை மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான நாடாளுமன்ற மன்ற குழு
 • அக்டோபர். 2006 ஜெனீவாவில் நடைபெற்ற 115 வது சட்டமன்றத்தில் இடை-நாடாளுமன்ற ஒன்றியத்தின் (IPU) கெளரவ உள் தணிக்கையாளர்.
 • மே 2008 - மே 2009 தலைவர், வக்ஃப் மீதான கூட்டு நாடாளுமன்றக் குழு.
 • ஜூலை 2008 - மே 2009 மற்றும் ஜனவரி 2010 - ஏப்ரல் 2012 புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற மன்றத்தின் துணைத் தலைவர்.
 • டிசம்பர் 2009 முதல் உறுப்பினர், பாரம்பரிய தன்மையை பராமரித்தல் மற்றும் நாடாளுமன்ற மாளிகையின் வளர்ச்சி தொடர்பான கூட்டு நாடாளுமன்றக் குழு.
 • டிசம்பர் 2011 - ஏப்ரல் 2012 துணைத் தலைவர், பேரிடர் மேலாண்மை தொடர்பான நாடாளுமன்ற மன்றம்
 • ஏப்ரல் 2012 மாநிலங்களவையில் உறுப்பினர் (நான்காவது தவணை)
 • ஆகஸ்ட் 2012 உறுப்பினர், உள்துறை குழு
 • 28 அக்டோபர் 2012 முதல், சிறுபான்மை விவகார அமைச்சர்

ஆதாரம்தொகு

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-10-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-08-15 அன்று பார்க்கப்பட்டது.
 2. https://en.wikipedia.org/wiki/Deputy_Chairman_of_the_Rajya_Sabha மக்களவையின் துணைத்தலைவர்கள் பட்டியல்
 3. Redefining Ambition: The Multifaceted Life of K Rahman Khan P58
 4. Recipients of "SAHAKARITA RATNA" Award
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._ரஹ்மான்கான்&oldid=3548770" இருந்து மீள்விக்கப்பட்டது