கிசான் விகாசு பத்திரம்
கிசான் விகாசு பத்திரம் (Kisan Vikas Patraஎ) ன்பது ஒரு சேமிப்பு சான்றிதழ் திட்டமாகும். இது 1988ஆம் ஆண்டில் இந்தியா அஞ்சல் துறையில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. ஆரம்பக் காலங்களில் இது வெற்றிகரமாக இருந்தது. இந்திய அரசு சியாமளா கோபிநாத்தின் மேற்பார்வையில் ஒரு குழுவை அமைத்தது இத்திட்டம் குறித்து பரிந்துரையினை கோரியது. இத்திட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக இந்த குழு அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் இத்திட்டத்தை இந்திய அரசு 2011ல் நிறுத்தி வைத்தது. பின்னர் புதிய அரசாங்கம் 2014இல் மீண்டும் தொடங்கியது.
கீழ்கண்டவர்கள் கிசான் விகாசு பத்திரத்தினை பெறலாம்:
- வயது வந்த ஒருவர் தனது சொந்த பெயரில், அல்லது மைனர் சார்பாக
- அறக்கட்டளை
- இரண்டு பெரியவர்கள் கூட்டாக
முதலீட்டு வரம்புகள்
தொகுகிசான் விகாசு பத்திரச் சான்றிதழ்கள் ரூ 1000, ரூ 5000, ரூ .10000 மற்றும் ரூ .50000 ஆகிய பிரிவுகளில் கிடைக்கின்றன. முதலீடு செய்யக்கூடிய குறைந்தபட்ச தொகை ரூ. 1000மாக இருப்பினும், இதில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு இல்லை.
வரி சலுகைகள்
தொகுகிசான் விகாசு பத்திர முதலீட்டாளருக்கு எந்த வருமான வரிச் சலுகைகளையும் வழங்கப்படவில்லை. முதலீட்டில் 80Cன் கீழ் எந்தவொரு விலக்கையும் கோரவோ அல்லது முதிர்வு/திரும்பப் பெறும்போது பெறப்பட்ட வட்டிக்கு வரி விலக்கோ கிடையாது. எவ்வாறாயினும், முதிர்ச்சியடைந்தவுடன் திரும்பப் பெறுதலின்போது மூலத்தில் (டி.டி.எஸ்) வரி குறைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
வட்டி வருமானம்
தொகுகிசான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை (முதன்மை) தற்போதுள்ள வட்டி விகிதத்தின்படி 124 மாதங்களில் இரட்டிப்பாகும். அக்டோபர் 1, 2021 முதல் டிசம்பர் 31 2021 வரை வட்டி விகிதம் 6.9% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.[1]
திரும்பப் பெறுதல்
தொகுகிசான் விகாஸ் பத்திரத்தின் முதலீட்டினை 124 மாதங்களுக்குப் பிறகு (10 ஆண்டுகள் மற்றும் 04 மாதங்கள்) திரும்பப் பெறலாம். இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் 6 மாதங்கள் (30 மாதங்கள்). இப்பத்திரத்தினை முன்கூட்டியே காசாக்க இயலாது. பத்திர தாரர் இறக்க நேரிட்டாலோ அல்லது நீதிமன்ற உத்தரவின் பேரில் முதலீடு திரும்பப் பெற இயலும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Singh, Sandeep. "From April 1, Kisan Vikas Patra Interest Rate Cut To 6.9%, Maturity Period Extended". NDTV. பார்க்கப்பட்ட நாள் 25 November 2020.