கிசா - 14 (நெல்)
கிசா - 14 (Giza-14) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மத்தியகால, மற்றும் நீண்டகால நெல் வகையாகும். ஆகத்து - செப்டம்பர் மாதம் வரையிலான சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 140 - 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[1] கிசா - 4 (Giza-4) எனும் நெல் வகையிலிருந்து தெரிவுசெய்து உருவாக்கப்பட்ட இந்நெல் வகை, மலை நெல் நீர்ப்பாசன முறையில் நன்கு சாகுபடி செய்யப்படுகிறது.
கிசா - 14 Giza-14 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
கிசா - 4 வகையிலிருந்து உருவாக்கப்பட்டது |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
140 - 150 நாட்கள் |
வெளியீடு |
1978 |
நாடு |
இந்தியா |
90 - 95 சென்டிமீட்டர் (90-95 cm), அரைக்குள்ளப் பயிராக வளரக்கூடிய இந்த நெற்பயிரின் தானியமணிகள், குட்டையாக தடித்தும், சற்று கடினமாகவும் உள்ளது. இதன் அரிசி சமைக்க தரமாக இருப்பதாக கூறப்படும் இவ்வகை நெல், வடஇந்தியப் பகுதியான சம்மு காசுமீர் பகுதியில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]
சான்றுகள்
தொகு- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Details of Rice Varieties". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-16.