கிசெலா பான்

செருமன் பத்திரிகையாளர்

கிசெலா பான் (Gisela Bon) செருமன் நாட்டைச் சேர்ந்த ஒரு ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் இந்தியவியலாளர் ஆவார். 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

கிசெலா பான்
Gisela Bonn
பிறப்பு22 செப்டம்பர் 1909
செருமனி
இறப்பு11 அக்டோபர் 1996 (வயது 87)
பணிபத்திரிகையாளர்
சுற்றுச்சுழல் செயற்பாட்டாளர்
இந்தியவியலாளர்
விருதுகள்பத்மசிறீ

இந்தோ-செருமன் உறவுகளை மேம்படுத்துவதில் இவரது பங்களிப்புகளுக்காக அறியப்பட்ட இவர், ஆங்கிலத்தில் இந்திய சவால் , துணைக்கண்டம் மற்றும் நேருவின் கீழ் இந்தியர்கள் போன்ற இந்தியா குறித்த பல புத்தகங்களை எழுதியுள்ளார்.[1][2] 1990 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நான்காவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[3]

இந்திய அரசின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பான கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் இந்தோ-செருமன் நட்பை மேம்படுத்துவதற்காக அவர் செய்த சேவைகளை கௌரவிப்பதற்காக 1996 ஆம் ஆண்டில் கிசெலா பான் விருது என்ற ஒரு விருதை நிறுவியது.[4]

கிசெலா பான் 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதியன்று காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "DIG Profile". Deutsch-Indischen Gesellschaft. 2015. பார்க்கப்பட்ட நாள் September 23, 2015.
  2. "Amazon profile". Amazon. 2015. பார்க்கப்பட்ட நாள் September 23, 2015.
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on October 15, 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
  4. "Gisela Bonn Award celebrates Indo-German friendship". German Missions in India. 2015. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் September 23, 2015.

வெளி இணைப்புகள்

தொகு
  • de: Gisela Bon, செப்டம்பர் 23,2015 அன்று பெறப்பட்டது
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசெலா_பான்&oldid=4091852" இலிருந்து மீள்விக்கப்பட்டது