கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.[1] நற்றிணை 364 எண் கொண்ட பாடலைப் பாடியவர் இவர். இவர் பாடியதாக இந்த ஒரே ஒரு பாடல்தான் உள்ளது.
காவிதி என்பது சிறந்த உழவர்களுக்கு அரசன் வழங்கும் விருது. கிழார் என்பது சிறந்த உழவரை மக்கள் பாராட்டும் விருது.
நற்றிணை 364 பாடல் சொல்லும் செய்தி
தொகுதலைவன் பிரிந்திருந்தபோது தலைவி எண்ணி எண்ணி மெலிந்ததை இப்பாடல் தெரிவிக்கிறது.
அவர் திரும்பி வருவேன் என்று சொல்லிச் சென்ற கார் காலம் போய்க் கூதிர் காலமும் வந்துவிட்டது. அத்துடன் ஆனிரை இல்லம் திரும்பும் மணியோசையுடன் ஆயர் குழலூதிக்கொண்டு இல்லம் திரும்பும் மாலைக் காலமும் வந்துவிட்டது. இனி என்னால் பல நாள் வாழமுடியாது போல் இருக்கிறது. என்ன செய்வேன்? என்று தலைவி வருந்துகிறாள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ கா., கோவிந்தன் (1964). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கக. மாநகர்ப் புலவர்கள் -2. (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 77.