கிடை

மாட்டு கிடையாக இருப்பது எது

கிடை என்பது ஆடு, மாடு போன்ற கால்நடைகளை இரவு நேரத்தில் வயல்போன்ற திறந்தவெளிகளில் தங்கவைக்கும் இடமாகும். ஆடுகளைக்கொண்டது ஆட்டுக் கிடை என்றும் மாடுகளைக் கொண்டது மாட்டுக் கிடை என்றும் அழைக்கப்படும். இந்த இடம் அடிக்கடி மாறக்கூடியது. ஆடு மாடுகள் இரவு படுத்திருக்கும்போது சிறுநீர், சாணம் ஆகியவற்றை ஒரே வயலில் இடுவதால், அந்த வயலுக்கு நேரடியான இயற்கை உரம் கிடைக்கிறது. இந்த நடைமுறை காவிரிப் பாசன மாவட்டங்களில் இன்றும் நடைமுறையில் காணப்படுகிறது.[1] இவ்வாறு கிடைபோட வயலின் உரிமையாளரிகளிடம் கிடைகாரர்கள் கட்டணம் வசூலிப்பர். தஞ்சை மாவட்டத்தில் கிடைபோட கிடை மாடுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து ஓட்டி வரப்படுகின்றன. இவ்வாறு கிடை போடுவது பெரும்பாலும் கோடைக்காலத்திலேயே நடக்கும். போதுமான மேய்ச்சல் நிலமில்லாதவர்கள் கிடைகார்களிடம் மாட்டை ஒப்படைபது உண்டு விதைப்புக் காலத்தில் திரும்ப மாடுகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் மேய்ச்சல் நிலம் குறைவாக இருப்பதால், தஞ்சாவூர் பகுதிக்கு கிடைபோட வருகிறார்கள். கிடையில் பெரும்பாலும் நாட்டு மாடுகள்தான் இருக்கும் இவையே எந்தச் சூழலையும் தாங்குகின்றன, நீண்ட காலம் பசுமாடு கன்று போடாமல் இருந்தாலும் மாடுகளை கிடைக்கு அனுப்பப்படும். இங்கு பல காளை மாடுகளும் இருப்பதால், பசுக்கள் விரைவில் சினை பிடித்துக் கன்றுகளை ஈனும்.

மேற்கோள்கள் தொகு

  1. வி. சுந்தர்ராஜ் (8 அக்டோபர் 2016). "மாடு கிடை போட்டால் பத்தாண்டுக்குப் பலன்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடை&oldid=3576942" இலிருந்து மீள்விக்கப்பட்டது