கிடைக்கக்கூடிய பெயர் (விலங்கியல்)
கிடைக்கக்கூடிய பெயர் என்பது விலங்கியல் பெயரிடலில், ஒரு விலங்கியல் பெயரை நிறுவுவதற்கான பன்னாட்டு விலங்கியல் பெயரிடலின் அனைத்து கட்டாய விதிகளுக்கு இணங்க வெளியிடப்பட்ட விலங்குகளின் உயிரலகு இருசொற் பெயராகும்.
கிடைக்கக்கூடிய பெயராக இந்தப் பெயர் அமைய, பல நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள் உள்ளன. இப்பெயரானது இலத்தீன் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நன்கு அறிமுகமான மூலத்தில் சரியான நேரத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். சில அரிதான சந்தர்ப்பங்களில், இந்த தேவைகளைப் பூர்த்தி செய்யாத பெயர் வரலாற்றுக் காரணங்களுக்காக அமையலாம்.[1]
கிடைக்கக்கூடிய அனைத்து பெயர்களும் ஒரு வகையைக் குறிக்க வேண்டும். சிற்றினங்கள் நிலையில் பெயர்கள், ஒரு மாதிரியிலும் (நிறைவகை அல்லது லெக்டோடைப்); பேரினப் பெயர் நிலையில், வகை என்பது ஒரு சிற்றினத்தின் பெயரினையும்; குடும்ப அளவிலான பெயர்களுக்கு, வகை ஒரு பேரினப் பெயரினையும் கொண்டுள்ளது. அனைத்து விலங்கியல் பெயர்களும் ஒரு உறுதியான அனுபவ நிலையினை படிநிலையான வகையில் வழங்கப்படுகிறது.
கிடைக்கக்கூடிய பெயர் சரியான பெயராக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் கிடைக்கக்கூடிய பெயர் ஒத்த பெயராக இருக்கலாம். இருப்பினும், சரியான பெயர் எப்போதும் கிடைக்கக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.
தாவரவியலுகான மாறுபாடு
தொகுதாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறையின் கீழ், இந்த சொல் பயன்படுத்தப்படவில்லை. தாவரவியலில், தொடர்புடைய சொல் சரியான முறையில் வெளியிடப்பட்ட பெயர் ஆகும்.[2] விலங்கியல் சொல்லின் தாவரவியல் சமமான "செல்லத்தக்கப் பெயர்" சரியான பெயர் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ICZN article 79 (in Chapter 17)". பார்க்கப்பட்ட நாள் 2 January 2012.
- ↑ McNeill, J.; Barrie, F.R.; Buck, W.R.; Demoulin, V.; Greuter, W.; Hawksworth, D.L.; Herendeen, P.S.; Knapp, S.; Marhold, K. (2012). International Code of Nomenclature for algae, fungi, and plants (Melbourne Code) adopted by the Eighteenth International Botanical Congress Melbourne, Australia, July 2011: Glossary. Vol. Regnum Vegetabile 154. A.R.G. Gantner Verlag KG. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-87429-425-6.