கிடைப்பருமை

எண்ணிலடங்காத தேவைகளை முழுமையாக நிறைவுசெய்ய முடியும் அளவிற்கு வளங்களானது போதியளவு காணப்படாமை பொருளியலில் கிடைப்பருமை அல்லது பற்றாக்குற்றை (Scarcity) எனப்படும். வேறுவிதமாக கருதினால் ஒரு குமுகத்தின் (சமூகத்தின்) இலக்குகள் யாவும் ஒரே சமயத்தினில் நிறைவு செய்யமுடியாது என்பதனைக் கிடைபருமை விளக்குகின்றது. ஆகவே ஒரு பண்டத்தினை உற்பத்தி செய்வதற்கு இன்னொரு பண்டத்தின் உற்பத்தியினை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது. பொருளியலாளரான லயனல் ராபின்சன் என்பவர் கிடைப்பருமையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து பொருளியலுக்கு அளித்த வரைவிலக்கணம் பின்வருமாறு:

மாற்றுப் பயன் உள்ள கிடைப்பருமையான வளங்களைக்கொண்டு தனது எண்ணிலடங்காத தேவைகளை நிறைவு செய்யும் மனித நடப்புகளை ஆராயும் அறிவியலே பொருளியலாகும். (economics is a science which studies human behavior as a relationship between ends and scarce means which have alternative uses.)

இவற்றினையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடைப்பருமை&oldid=3749037" இலிருந்து மீள்விக்கப்பட்டது