கியூரி வெப்பநிலை
இயற்பியல் மற்றும் பொருளறிவியலில், கியூரி வெப்பநிலை (Curie temperature, Tc), அல்லது கியூரி புள்ளி (Curie point), எனப்படுவது பொருள் ஒன்றின் நிலைத்த காந்தப் பண்புகள் தூண்டல் காந்தப் பண்புகளாக மாறும் வெப்பநிலை வரம்பு ஆகும்.
எடுத்துக்காட்டாக நேர்க்காந்த (ferro-magnetic) பண்புடைய பொருட்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பு வெப்பநிலைக்குக் மேல் தங்களது நிலைத்த அல்லது தானாகத் தோன்றும் காந்தப் பண்புகளை இழந்து விடுகின்றன. கியூரி வெப்பநிலை எனப்படும் இவ்வெப்பநிலை ஒவ்வொரு பொருளுக்கும் மாறுபடுகிறது.[1].
உசாத்துணைகள்
தொகு- ↑ A Dictionary of science -ELBS