கியூலியானா காவக்லியேரி தெசாரோ

பெயர்பெற்ற கரிம வேதியியலாளர்

முனைவர் கியூலியானா தெசாரோ (நேயெ காவக்லியேரி) (Giuliana Tesoro) (1921–2002) இத்தாலியாவின் வெனிசுநகரில் 1921இல்பிறந்தார். இவர்1939இல் பெனிட்டோ முசோலினி காலத்தில் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தார். இவர் 125க்கும் மேற்பட்ட அமெரிக்க உரிமங்கள் பெற்ற பெயர்பெற்ற கரிம வேதியியலாளர் ஆவார். நாரிழை, துகில் தொழில்துறையில் பல்வேறு பங்களிப்புகளைச் செய்துள்ளார். இவரது மிகவும் புகழ்பெற்ற புதுமைப்புனைவு தணல்தாங்கு நாரிழை ஆகும். இவர் 2002 செப்டம்பர் 29இல் 81 அகவையில் நியூ யார்க், தோப்சு ஃபெர்ரியில் மரணமடைந்தார்.[1][2]

கியூலியானா காவக்லியேரி தெசாரோ
பிறப்புகியூலியானா காவக்லியேரி
ஜூன் 1,1921
வெனிசு, இத்தாலி
இறப்புசெப்டம்பர் 29, 2002(2002-09-29) (அகவை 81)
தோப்சு ஃபெர்ரி, நியூ யார்க்
பணிகரிம வேதியியலாளர், பலபடிம வேதியியலாளர், புதுமைப்புனைவாளர், பேராசிரியர்
அறியப்படுவதுதீத்தடுப்புத் துகில்கள் புதுமைப்புனைவு

கல்வியும் தொழில்துறைப் பட்டறிவும்

தொகு

கியூலியானோ காவக்லேரி வெனிசு நகரில் யூதக் குடும்பத்தில் 1921இல் பிறந்தார். இவரது தந்தையாரான ஜினோ காவக்லேரி ஓர் ஆயுள்காப்பீட்டு நிறுவன மேலாளராக இருந்தார். இவரது 12ஆம் அகவையில் தந்தையார் இறந்துவிட்டுள்ளார். இவர் 1938இல் தன் பள்ளிப்படிப்பை முடித்ததும் பாசிச இனச் சட்டம் அறிவிக்கப்பட்டதால் இத்தாலியப் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக் கொள்ள மறுக்கப்பட்டுள்ளார். எனவே முதலில் இவர் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தார். பிறகு 1939இல் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.[3]

அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பில் சேர்ந்து உரிய காலத்துக்கு முன்னரே முடித்துள்ளார். In 1943, at the age of 21,[4] காவக்லேரி கரிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் இவர் விக்டர் தெசாரோவை மணந்துள்ளார். இவருக்கு இரு குழந்தைகள் பிறந்தனர்.[3]

இவர் திருமணத்துக்குப் பின்னர் கோடைக்காலங்களில் காலிகோ வேதியியல் குழுமத்தில், 10944இல் ஓனிக்சு எண்ணெய், வேதியியல் குழுமத்தில் ஆராய்ச்சி வேதியியலாளராகச் சேரும்வரை, பணிபுரிந்தார். இங்கு இவர் 1946இல் கரிமத் தொகுப்பியல் துறையின் தலைவரானார். மேலும் 1955இல் அதனுதவி ஆராய்ச்சி இயக்குநராக உயர்ந்தார் 1957இல் இணை இயக்குநராகியுள்ளார். பின்னர் இவர் ஜே.பி. சுட்டீவன்சு அண்டு குழுமத்தில் கரிமவியல் ஆராய்ச்சித் துணை இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். பிறகு இவர் திகில் ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் சென்றுள்ளார்.. இவர் 1969இல் பர்மிங்காம் தொழிலகத்தில் முதுநிலை வேதியியலாளராகவும் 1971இல் வேதியியல் ஆராய்ச்சி இயக்குநராகவும் பதவியேற்றுள்ளார்.

இவர் 1972இல் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியராக பதவியேற்றுள்ளார். அங்கு 1975 வரை கல்வி கற்பித்துள்ளார்.மேலும் அதேவேளையில் அங்கு இணை பேராசிரியராகவும் முதுநிலை ஆராய்ச்சி அறிவியலாளராகவும் 1982 வரை இருந்துள்ளார்.[5] இவர் 1982இல் புரூக்லினில் உள்ள நியூ யார்க் பல்கலைக்கழகத்தி பல்தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சிப் பேராசிரியராக இருந்து 1996இல் ஓய்வு பெற்றுள்ளார்.[1][6]

வேதியியல், துகிலியல் பங்களிப்புகள்

தொகு

தெசாரோ துகில், கரிமப் பொருட்கள் சார்ந்த செயல்முறைகளில் பல மேம்ப்பாடுகளைச் செய்து, துகில்சார்ந்த அன்றாட நுகர்வோர் நலங்களையும் செயல்முறை அமைப்புகளின் திறமையையும் உயர்த்தியுள்ளார். இவர் தணல்தாங்கு நாரிழைகள் புதிதாக உருவாக்கி, அவற்றில் அதாவது செயற்கை நாரிழைகளில் மின்னேற்றம் தேங்கலைத் தவிர்க்கும் வழிமுறைகளை உருவாக்கினார். மேலும் துகில்களின் மேம்பட்ட நிலைத்த அழுத்த இயல்புகள் உருவாக்கினார்.[1]

குழுக்களும் விருதுகளும்

தொகு

தெசாரோ தேசிய அறிவியல் கல்விக்கழகம், தேசிய ஆராய்ச்சி மன்றம் ஆகியவற்றின் பொருள், தீக்காப்பு சார்ந்த பல குழுக்களில் பங்கேற்றுள்ளார். இவர் தனிக்குழுக்களில் பங்கேற்ற கழகங்களாவன: நாரிழைக் கழகம், நிறுவனர்/தலைவர், 1974, அமெரிக்க வேதியியல் கழகம், அமெரிக்கத் துகில் வேதியியலாளர்/வண்ணவியலாளர் கழகம், வெதியிய்லாரின் அமெரிக்க நிறுவனம், அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகம்.[6] In 1963, Tesoro was awarded the Olney Medal of the American Association of Textile Chemists and Colorists. She was the recipient of the Society of Women Engineers’ Achievement Award in 1978.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Giuliana Tesoro". Inventor of the Week Archive. MIT. பார்க்கப்பட்ட நாள் 9 March 2013.
  2. "Paid Notice: Deaths TESORO, GIULIANA". New York Times. New York Times. பார்க்கப்பட்ட நாள் 9 March 2013.
  3. 3.0 3.1 George Carpetto, "Giuliana Cavaglieri Tesoro." In Italian Americans on the Twentieth Century, ed. George Carpetto and Diane M. Evanac. Tampa, FL: Loggia Press, 1999, p.372.
  4. 4.0 4.1 "Women's History Month - Giuliana Tesoro". Smithtown Matters. பார்க்கப்பட்ட நாள் 9 March 2013.
  5. George Carpetto, "Giuliana Cavaglieri Tesoro." In Italian Americans on the Twentieth Century, ed. George Carpetto and Diane M. Evanac. Tampa, FL: Loggia Press, 1999, p.373.
  6. 6.0 6.1 Wayne, Tiffany K. (2011). American Women of Science Since 1900. Greenwood Publishing Group. pp. 912–913. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59884-158-9.

நூல்தொகை

தொகு
  • George Carpetto, "Giuliana Cavaglieri Tesoro." "20ஆம் நூற்றாண்டில் இத்தாலிய அமெரிக்கர்கள், ed. George Carpetto and Diane M. Evanac. Tampa, FL: Loggia Press, 1999, pp. 372–373.

நூல்தொகை

தொகு
  • George Carpetto, "Giuliana Cavaglieri Tesoro." In Italian Americans on the Twentieth Century, ed. George Carpetto and Diane M. Evanac. Tampa, FL: Loggia Press, 1999, pp. 372–373.

வெளி இணைப்புகள்

தொகு