கியோதி அருவி
கியோதி அருவி (Keoti Falls-கெவ்டி என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் உள்ளது. இது இந்தியாவின் 24ஆவது மிக உயரமான அருவியாகும்.[1]
கியோதி அருவி | |
---|---|
கியோதி அருவி அருவி, ரேவா மாவட்டம் மத்தியப் பிரதேசத்தில் (15 ஆகத்து 2021) | |
அமைவிடம் | ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறு | 24°48′58″N 81°27′11″E / 24.816°N 81.453°E |
வகை | பிரிக்கப்பட்ட |
மொத்த உயரம் | 98 மீட்டர்கள் (322 அடி) |
வீழ்ச்சி எண்ணிக்கை | 1 |
நீர்வழி | மகானா அருவி, தாம்சா அல்லது தான்சு ஆற்றின் கிளையாறு |
அருவி
தொகுரேவா பீடபூமியிலிருந்து கீழே, தம்சா அல்லது தான்சு ஆற்றின் கிளை ஆறான மகானா ஆற்றில் கியோதி அருவி உள்ளது. இதன் மொத்த உயரம் 98 மீட்டர்கள் (322 ft) ஆகும். உலக அருவி தரவுத்தளம் இந்த நீர்வீழ்ச்சியின் உயரத்தை 130 மீட்டர்கள் (430 ) என்று குறிப்பிடுகிறது.[2] இது ஓர் அடுக்குடன் கூடிய நீர்வீழ்ச்சியாகும்.[2]
கால்வாய் சாய்வில் ஏற்பட்ட இடைவெளியில் நீர் செங்குத்தாக விழுகின்றது. இதனால் நீர்வீழ்ச்சி உருவாகிறது. கியோட்தி அருவி புத்துணர்ச்சி ஏற்படுத்தும் ஒரு முனையத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.
அமைவிடம்
தொகுகியோதி அருவி ரேவா மாவட்டத்திலிருந்து 46 கிலோமீட்டர் (29 மைல்) தொலைவில், சிர்மோர் தொகுதிக்கு அருகிலுள்ள கைமூர் மலைத்தொடரின் ஒரு பகுதியான சித்திரகூட மலைகளின் விளிம்பில் அமைந்துள்ளது.[3]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2012-09-05. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
- ↑ 2.0 2.1 "Keoti Falls". World Waterfall Database. பார்க்கப்பட்ட நாள் 2010-06-28.
- ↑ "Chitrakoot". Archived from the original on 2010-07-31. பார்க்கப்பட்ட நாள் 2010-06-28.