கியோத்தோ மேயர் தேர்தல், 2012
கியோத்தோ நகருக்கான மேயர் தேர்தல் பெப்ரவரி 5, 2012 அன்று நடைபெற்றது .இதில் கடோகவா டய்சாகு 31,794 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார் .
வேட்பாளர்கள்
தொகுஇந்தத் தேர்தலில் ஜனநாயக, தாராள ஜனநாயக மற்றும் கொமேய் ஆகிய மூன்று பெரிய கட்சிகளும் பொது வேட்பாளராக , மேயராக இருந்த கடோகவா டய்சாகுவிற்கு ஆதரவு தெரிவித்தனர். அவருக்கு எதிராக ஜப்பான் பொதுவுடைமைக் கட்சியின் ஆதரவு பெற்ற நகமுரா கசுவோ நிறுத்தப்பட்டார்.
முடிவுகள்
தொகு57 வயதான வழக்கறிஞர் நகமுரா, 1 லட்சத்து 89 ஆயிரத்து 971 வாக்குகளைப் பெற்றார். கடந்த முறை போட்டியிட்டபோது 1 லட்சத்து 57 ஆயிரத்து 521 வாக்குகளைப் பெற்றிருந் தார். இம்முறை மூன்று பெரிய கட்சிகளின் ஆதரவை கடோகவா பெற்றிருந்தாலும், குறுகியவாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது. ஆளும் மற்றும் பிரதான எதிர்க்கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிராக நின்ற நகமுராவின் வாக்கு சதவிகிதம் 37.2ல் இருந்து 46.1 ஆகவும் உயர்ந்தது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Incumbent Kyoto mayor re-elected". பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2015.