கிய்யா கிய்யா குருவி
கிய்யா கிய்யா குருவி என்பது சிறுவர் சிறுமியர் விளையாட்டுகளில் ஒன்று. தொடக்கப் பள்ளிகளிலும் இது விளையாடப்படும். பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்னும் நீதியைப் புகட்டும் நடிப்பு விளையாட்டு இது.
புதரில் சிக்குண்டு பறந்து வரும்போது சிறகு ஒடிந்த குருவி ஒன்று தனக்குக் கூடு கட்டிக்கொள்ள மரங்களைப் பார்த்து இடம் கேட்பது போலவும், வாழைமரம், தென்னைமரம், பனைமரம் போன்றவை இடம் தராதது போலவும், ஆலமரம் இடம் தருவது போலவும் உரையாடி விளையாடும் ஆட்டம் இது.
பாடல் குருவி
- கிய்யா கிய்யா குருவி நான்
- சிறகொடிந்த குருவி நான்
- வாழைமரமே வாழைமரமே
- மழைகாலத்தில் கூடு கட்ட இடம் தருவாயோ
வாழைமரம்
- இடம் தர மாட்டேன்
--- --- ---
ஆலமரம்
- இடம் தருகிறேன்
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா. சுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாழாய்ச்சி நிறுவன வெளியீடு. 1980