கிரண்மயி மிஸ்ரா

இந்திய எழுத்தாளர்

கிரண்மயி மிஸ்ரா (பிறப்பு ஜூன் 2, 1968) இந்தியாவின் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த ஒரிய நாவலாசிரியரும் கவிஞருமட்டுமல்லாமல் ஒடிசாவின் அடாஸ்பூரில் உள்ள கல்லூரியில் அரசியல் அறிவியல் மற்றும் ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவில் பேராசிரியராகவும் உள்ளார்.

வாழ்க்கை

தொகு

ஒரிய நாவலாசிரியரான மதன் மோகன் மிஸ்ரா மற்றும் அனுசயா மிஸ்ரா ஆகியோருக்கு மகளாக பிறந்த கிரண்மயி, [1] உத்கல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி ஆவார். மிஸ்ரா, கட்டாக்கில் உள்ள அதாஸ்பூரில் உள்ள உதயநாத் தன்னாட்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அரசியல் அறிவியல் மற்றும் ஆங்கில இலக்கியம் கற்பித்து வருகிறார். மேலும்[2] பெண்கள் ஆய்வு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். [1]

புத்தகங்கள்

தொகு

அவரது இலக்கியப் படைப்புகள் பின்வருமாறு:

  • கோட்டி பர்சராதிரா கஹானி
  • பிரதம
  • கின்னரிர கப்ய
  • நிலா ரங்கரா நிஷா
  • பஸ்னயிதா ரதி
  • கேட்டே துரே மோரா பிரியா தேஷா (பயணக் குறிப்பு)
  • பிபோர்பெலா (கவிதை)
  • மேகா பக்கிர கீதா

பொது இடத்தில் ஒரு பயனுள்ள பங்கிற்காக தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துதல்: ஒரிசாவின் பஞ்சாயத்துகளில் பெண்களின் வழக்கு ஆய்வு (2013) என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையும் எழுதி சமர்ப்பித்துள்ளார். [3]

அங்கீகாரம்

தொகு

2018 ஆம் ஆண்டில், ஒடியா புனைகதை எழுத்துக்களில் இவரது பங்களிப்பிற்காக கன்ஹெய் கதா புரஸ்கார் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்கும் முன்பாக,

  • புவனேஸ்வர் புஸ்தக் மேளா புனைகதை விருது,
  • கதா நபப்ரதிவா விருது,
  • பாரதிய பாசா பரிஷத் இளைஞர் விருது,
  • காதம்பினி சிறந்த புனைகதை விருது,
  • புவனேஸ்வர் பெஹெரா மாநில புனைகதை விருது,
  • டைம் பாஸ் புக்கர் விருது போன்ற பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். [2] [4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Gender justice themes attract me: Hiranmayee - OrissaPOST". Odisha News, Odisha Latest news, Odisha Daily - OrissaPOST (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-06-27. பார்க்கப்பட்ட நாள் 2019-09-29.
  2. 2.0 2.1 "Kanhei Katha Puraskar for Hiranmayee Mishra". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-09-29."Kanhei Katha Puraskar for Hiranmayee Mishra". The New Indian Express. Retrieved 29 September 2019.
  3. "Cambridge Scholars Publishing. Negotiating Privately for an Effective Role in Public Space". www.cambridgescholars.com. Archived from the original on 2019-09-29. பார்க்கப்பட்ட நாள் 2019-09-29.
  4. "Shakti Mohanty's 'Casino' wins Time Pass Booker award" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-07-03. Archived from the original on 2018-08-06. பார்க்கப்பட்ட நாள் 2019-09-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்மயி_மிஸ்ரா&oldid=3685596" இலிருந்து மீள்விக்கப்பட்டது