கிராட்டோச்விலைட்டு

கரிமக் கனிமம்

கிராட்டோச்விலைட்டு (Kratochvilite) என்பது C13H10 அல்லது (C6H4)2CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஒரு நீரகக் கரிமமான இது ஓர் அரிய கரிமக் கனிமமாகும். நிலக்கரி அல்லது பைரைட்டு களிப்பாறை படிவுகள் எரிவதால் இக்கனிமம் உருவாகிறது. அரோமாட்டிக் ஐதரோகார்பன் புளூவோரீனின் பல்லுருத்தோற்றம் கிராட்டோச்விலைட்டு என்று கருதப்படுகிறது. வெண்மை, மஞ்சள் கலந்த பழுப்பு நிறங்களில் செஞ்சாய்சதுரப் படிகங்களாக பெரும்பாலும் படிகத்திரள் படிந்த தகடுகளாக இது தோன்றுகிறது. ஒப்படர்த்தியாக 1.21 என்ற மதிப்பும் மோவின் அளவு கோல் கடினத்தன்மை மதிப்பாக 1 முதல் 2 என்ற மதிப்பும் இக்கனிமத்திற்கு கணக்கிடப்பட்டுள்ளது.

கிராட்டோச்விலைட்டு
Kratochvílite
பொதுவானாவை
வகைகரிமக் கனிமம்
வேதி வாய்பாடுC13H10
இனங்காணல்
நிறம்வெண்மை
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.578 nβ = 1.663 nγ = 1.919
இரட்டை ஒளிவிலகல்δ = 0.341
மேற்கோள்கள்[1][2][3]

1937 ஆம் ஆண்டு செக் குடியரசை சேர்ந்த பொகிமியாவின் நெயித்லி சுரங்கத்தில் முதன்முதலில் இக்கனிமம் கண்டறியப்பட்டது [2].

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராட்டோச்விலைட்டு&oldid=2732484" இலிருந்து மீள்விக்கப்பட்டது