கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ III

நிகழ்பட விளையாட்டு

கிராண்ட் தெப்ட் ஆட்டோ III (Grand Theft Auto III) என்பது அதிரடி-சாகச காணொளி விளையாட்டு ஆகும். இதனை டி எம் ஏ டிசைன் நிறுவனம் உருவாக்கியது. ராக்ஸ் ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் இதனை வெளியிட்டது. அக்டோபர் 2001 இல் பிளே ஸ்டேசன் 2 இல் வெளியானது. மே 2002 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் விண்டோசுவிலும், அக்டோபர் 2003 இல் எக்சு பாக்சிலும் வெளியானது. இதன் பத்தாம் ஆண்டில் செல்லிடத் தொலைபேசி இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட பதிப்பினை 2011 ஆம் ஆண்டில்  வெளியிட்டது. இந்த விளையாட்டு கிராண்ட் தெப்டின் ஐந்தாவது பதிப்பு ஆகும். இது 1999 ஆம் ஆண்டில் வெளியான கிராண்ட் தெப்ட் ஆட்டோ 2 க்குப் பிறகு முக்கிய பதிப்பாகக் கருதப்படுகிறது

நியூயார்க் நகரத்தினை அடிப்படையாகக் கொண்டு லிபெர்ட்டி எனும் புனைவு நகரத்தில் விளையாடப்படும் விதமாக இந்த விளையாட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டானது ஒரு மூன்றாம் நபர் பார்வையில் இருந்து விளையாடப்படுகிறது. மேலும் இந்த விளையாட்டில் நடந்து சென்றோ அல்லது வாகனத்தில் பயனித்தோ விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. லிபர்ட்டி நகரத்தில் மூன்று தீவுகள் அமைக்கப்பட்டிருக்கும். அதில் வீரர்கள் எந்த தீவில்வேண்டுமானாலும் சுதந்திரமாக சுற்றித் திரியலாம். இந்த விளையாட்டின் மேம்படுத்தும் பணிகளை எடின்பர்க்கினை தலைமையிடமாகக் கொண்ட டி எம் ஏ டிசன் நிறுவனம் மற்றும் நியூயார்க்கினை அடிப்படையாகக் கொண்ட ராக்ஸ் ஸ்டார் நிறுவனமும் மேற்கொண்டன. கிராண்ட் தெப்ட் ஆட்டோ சீரிசின் பிரபலமான கூறுகளாகக் கருதப்படுபவைகளை முப்பரிமான காட்சிகளாக மாற்றுவதினை இந்த பதிப்பில் முக்கிய மேம்பாடாக கருதப்பட்டது. முப்பரிமான தொழில் நுட்பத்தில் இந்த விளையாட்டு விளையாடப்படுவது இதுவே முதல் முறையாகும். செப்டம்பர் 2011 தாக்குதலால் இந்த விளையாட்டு வெளிவாதில் தாமதம் ஆனது.

விளையாடும் முறை

தொகு

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ III என்பது மூன்றாம் நபரின் பார்வையில் விளையாடும் ஒரு அதிரடி-சாகச விளையாட்டு. இந்த விளையாட்டில் வீரர்கள் அவர்களுக்கான மேற்பணிகளை செய்கையில் வரும் தடைகளைத் தாண்டி அதனை நிறைவு செய்தல் வேண்டும்.[1] இதில் வீரர்கள் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மேற்பணிகளைச் செய்ய வேண்டி இருக்கும் சில சமயங்களில் ஒரு மேற்பணிகளைச் செய்து முடித்த பிறகு அடுத்த பணிக்கான அறிவுறுத்தலுக்காகவோ அல்லது நிகழ்வுகள் வருவதற்கு காத்திருக்க வேண்டியிருக்கலாம்.[2] மேற் பணிகளுக்கு அப்பால், வீரர்கள் விளையாட்டின் திறந்த உலகில் சுதந்திரமாக சுற்றலாம், மேலும் விருப்பமான மேற்பணிகளைச் செய்து முடிக்கலாம். லிபர்ட்டி சிட்டி மூன்று பெருநகரங்களைக் கொண்டது. அவையாவன: போர்ட்லேண்ட், ஸ்டாண்டன் தீவு மற்றும் ஷோர்சைட் வேல். இதில் போர்ட்லேண்ட் மேற்பணிகளைச் செய்து முடித்த பிறகு மற்ற இரு பெரு நகரங்களில் விளையாட அனுமதி கிடைக்கும்.[3]

விண்டோசு பதிப்புகள்

தொகு

மே 2002 இல் விண்டோசு பதிப்பிற்கான வைஸ் சிட்டி வெளியானபோது நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. விமர்சகர்கள் இந்த விளையாட்டிற்கு 100 க்கு 93 புள்ளிகள் கொடுத்தனர். 2002 ஆம் ஆண்டில் விண்டோசு பதிப்பில் வெளியான ஒரு விளையாட்டிற்கு கொடுக்கப்படும் அதிக பட்ச புள்ளி இதுவாகும். . விமர்சகர்கள் முந்த விளையாட்டில் இருந்ததனை விட  காட்சி அமைப்புகளும் கட்டுப்பாட்டு முறைகளும் சிறப்பாக இருந்ததாக விமர்சகர்கள் பாராட்டினர். ஆனால் இந்த விளையாட்டினை நிறுவுவதற்கு தேவையான நிபந்தனைகள் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

சான்றுகள்

தொகு
  1. Perry, Doug (22 October 2001). "Grand Theft Auto III". IGN. Ziff Davis. from the original on 9 April 2016. Retrieved 21 December 2015.
  2. Perry, Douglass C. (3 October 2001). "An Interview With DMA's Les Benzies". Archived from the original on 14 April 2016. Retrieved 9 April 2016.
  3. Perry, Douglass (22 February 2001). "Grand Theft Auto 3: Interview with DMA". IGN. Ziff Davis. Archived from the original on 20 April 2016. Retrieved 19 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராண்ட்_தெஃப்ட்_ஆட்டோ_III&oldid=3485641" இலிருந்து மீள்விக்கப்பட்டது