கிராத்தங்கன் சண்டை
கிராத்தங்கன் சண்டை (Operation Alphabet) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நார்வேயில் நடைபெற்ற ஒரு சண்டை. நார்வே போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நார்வீஜியப் படைகள் ஜெர்மானியக் கட்டுப்பாட்டிலிருந்த நார்வீக் நகரை மீட்க முயன்று தோற்றன.
கிராத்தங்கன் சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
நார்வே போர்த்தொடரின் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நோர்வே | ஜெர்மனி | ||||||
பலம் | |||||||
1 பட்டாலியன் | 165 வீரர்கள் | ||||||
இழப்புகள் | |||||||
34 பேர் கொல்லப்பட்டனர் 64 பேர் காயமடைந்தனர் 130 கைது செய்யப்பட்டனர் | 6 பேர் கொல்லப்பட்டனர் 16 பேர் காயமடைந்தனர் 3 பேரைக் காணவில்லை |
நார்வீக் நார்வேயின் வடபகுதியில் உள்ள ஒரு துறைமுக நகரம். அப்பகுதியில் இருந்த ஒரே உறையாத் துறைமுகம் அது ஒன்று தான். அதன் வழியே சுவீடன் நாட்டில் வெட்டியெடுக்கப்படும் இரும்புத் தாது நாசி ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. எனவே ஜெர்மனி நார்வே மீது படையெடுத்த போது நார்வீக்கைக் கைப்பற்றுவது அதன் முக்கிய இலக்குகளுள் ஒன்றாக இருந்தது. ஏப்ரல் 10ம் தேதி நார்வீக்கை ஜெர்மானியப் படைகள் கைப்பற்றின. நார்வீக்கை மீண்டும் கைப்பற்ற நேச நாட்டுப் படைகளும் நார்வீஜியப் படையும் தொடர்ந்து முயன்றன. அதன் ஒரு பகுதியாக நார்வீக் அருகேயுள்ள கிராத்தங்கன் என்ற இடத்தை ஏப்ரல் 23ம் தேதி தாக்கினர். இரு நாட்கள் நடைபெற்ற இத்தாக்குதலை ஜெர்மானியப்படைகள் முறியடித்துவிட்டன. இறுதிவரை நார்வீக் நகர் ஜெர்மானியர் வசமே இருந்தது.