கிராப்பட்டி, திருச்சிராப்பள்ளி
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
கிராப்பட்டி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி நகரத்தின் ஒரு பகுதியாகும். இந்த பகுதி எடமலைப்பட்டி புதுரை ஒட்டி திருச்சிராப்பள்ளி-மதுரை சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 45 பி) திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2.5 கி.மி. தூரத்திலும் தொடருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. கிராப்பட்டியின் வடக்கில், தமிழ்நாடு சிறப்புக் காவல் குடியிருப்பும், கிழக்கில் இராணுவ முகாமும் மற்றும் மேற்கில் ரயில்வே தொழிலாளர் குடியிருப்பும் உள்ளன.[1]
புள்ளிவிவரங்கள்
தொகுகிராப்பட்டியில் குடியிருப்பவர்கள் பொதுவாக வங்கியாளர்கள், வணிகர்கள், ஆசிரியர்கள் மற்றும் எழுத்தர் தொழிலாளர்கள் ஆவார். இப்பகுதி நடுத்தர வர்க்க மற்றும் உயர் நடுத்தர வர்க்க மக்கள் சமமாக வாழும் பகுதியாகும்.
வரலாறு
தொகு1920களின் ஆரம்பத்தில் திரு. டி. எஸ். ஆரோக்கியசாமி பிள்ளை கிராப்பட்டி கிராம சமூகத்திடமிருந்து நிலத்தை வாங்கி உரோமன் கத்தோலிக்கர்களுக்காக ஒரு காலனியை நிறுவினார். இவரும் இவரது நண்பர்களும், திருச்சி நகரத்திலிருந்து வந்த அனைத்து முன்னோடிகளும் இந்த முள் நிறைந்த தரிசு நிலத்தை தங்கள் எதிர்கால குடியிருப்புகளுக்காகத் தேர்ந்தெடுத்து 28.05.1927 அன்று "க்ராஃபோர்டு காலனி" என்று பெயரிட்டனர். அந்த நாட்களில் ஆரம்பத்தில் இந்த பகுதி உருவாக்கப்படவில்லை. இவர்கள் 28.08.1927 அன்று எண்: ஆர் 305இன் கீழ் கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்கி, அதற்கு 'கிராப்பட்டி கத்தோலிக்க கூட்டுறவு கட்டிடச் சங்கம்' என்று பெயரிட்டனர். பரந்த கட்டிட மனைகள் (150 முதல் 90 அடி) மிகப் அகலச் சாலைகளுடன் உருவாக்கப்பட்டன.
அக்காலத்தில் மின்சாரம் வசதி அவ்வளவாக இல்லை. எனவே டி. எஸ்.அரோக்கியாசாமி பிள்ளை அப்போதைய மின்சார விநியோக நிறுவனமான எஸ். எம். இ. எஸ். நிறுவனத்தின் பரிந்துரைத்தபடி ஒரு அரிசி ஆலையைத் தொடங்கி இந்த பகுதிக்கு மின்சாரத்தைக் கொண்டு வந்தார். ஓர் கத்தோலிக்க தேவாலயம் 1934 நிறுவப்பட்டது. இதற்கு புனித தெரசா தேவாலயம் என பெயரிடப்பட்டது. தேவாலயம் 1934 இல் கட்டி முடிக்கப்பட்டது. பள்ளியின் தேவையினை உணர்ந்து அதற்கான இடத்தையும் ஒதுக்கினர். திருச்சியின் செயின்ட் அன்னேவின் சகோதரிகளால் நிர்வகிக்கப்படும் சிறு மலர் தொடக்கப்பள்ளியும் உள்ளது.
- கிராப்பட்டி காலனி
- காவிரி நகர்
- முஸ்லீம் தெரு
- ரயில்வே காலனி
- டி.எஸ்.பி முகாம்
- டி.எஸ்.ஏ நகர்
- கான்வென்ட் தெரு
- மிஷன் கோவில் தெரு
- பிள்ளையர் கோவில் தெரு
- காந்தி நகர்
- அன்பு நகர்
- அருணாசலம் நகர்
- பாரதி மின் நகர்
- ஜோசப் காலனி
- புஷ்பம் காலனி
- எஸ்பிஐ அதிகாரிகள் காலனி
- ஆரோக்கியா நகர்
பள்ளிகள்
தொகு- சிறுமலர் மேல்நிலைப் பள்ளி.,
- சாண்டா மரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி/மாண்டிசோரி பள்ளி.
- செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி (சொள்டாம்பிகா நிறுவனம், முன்னர் கலைமகள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி)