கிராமக் கோயில்கள்
கிராமக் கோயில்களில் பல காவல் தெய்வங்களாகவே இருக்கின்றன. இந்த காவல் தெய்வங்களுக்கு மது, சுருட்டு போன்ற போதைப் பொருட்கள் படையலாக வைத்து வணங்குகின்றனர். இக்கோயில்களில் ஆடு, கோழி போன்ற உயிரினங்களைப் பலியிட்டு அதை அசைவ உணவுகளாக்கி அந்த உணவையும் சேர்த்துப் படைத்து வணங்குகின்றனர். வரலாற்றுப் பூர்வமான பெருங்கோயில்களில் இருக்கும் வழக்கம் கிராமக் கோயில்களில் இருப்பது இல்லை. இந்தக் கிராமக் கோயில்களில் அந்த கோவிலை அமைத்தவர்களில் ஒருவரே பூசாரிகளாகவும் இருந்து வருகிறார்கள்.