கிராமினாய்டு
தாவரவியல் மற்றும் சூழலியலில், கிராமினாய்டு (Graminoid) என்ற வார்த்தை புல் போன்ற புறத்தோற்றமுடைய ஹெர்பேசியஸ் தாவரங்களைக் குறிப்பதாகும், எ.கா. நீண்ட கத்தி போன்ற இலைகளுடன் இருக்கும் நீளமான புல்தண்டுகளைக் குறிக்கும். அவை அகலிலை மூலிகைக்கு வேறுபட்டதாகவும், புல் போன்ற புறத்தோற்றமற்ற மூலிகைத் தாவரங்களாகவும் காணப்படுகிறது.[1]
இந்தத் தாவரங்கள் பெரும்பாலும் போயேசி (விறைப்பு புல் வகைகள்), சைப்பரேசி (செட்ஜெஸ்), ஜன்கேசி (ரஷ்ஷஸ்) குடும்பத்தைச் சார்ந்தவையாக உள்ளன.[2]
இவைகள் ஒத்த புறத்தோற்றத்துடன் இருப்பதைத் தவிர, கிராமினாய்டுகளுடன் இருப்பிடத்தை பகிர்ந்து கொண்டு பரவலாக காணப்படுகின்றன. மேலும் இவை புல்வெளிகள் அல்லது சதுப்புநிலங்கள் போன்ற வாழிடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இருப்பினும் இவை அடர்த்தியான காடுகள் உள்ள இடங்களிலும் காணப்படுகின்றன. புற்களைக் காட்டிலும் கோரைப்புற்களும், நாணற்புதர்களும் ஈரப்பதமான வாழ்விடங்களை விரும்புகின்றன.
-
சாதாரண ரஷ் (ஜங்கஸ் எஃபசஸ்), ஜங்கேசியே
-
நட்ஸெட்ஜ் (சைபெரஸ் கேபிடாடஸ்), சைபெரேசியே
-
பெஸ்டுகா சினேரியா, போயேசியே
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Park, Chris; Allaby, Michael (2017). A Dictionary of Environment and Conservation (in ஆங்கிலம்). Oxford University Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acref/9780191826320.001.0001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780191826320.
- ↑ "Graminoids". Center for Native Plants (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-29.