கிராம் அணு

கிராம் அணு (gram-atom) அல்லது கிராம் அணு நிறை அல்லது கிராம் அணுத் திணிவு (Gram atomic mass) என்பது ஒரு தனிமத்தின் நிறையை கிராம் அலகுகளில் கூறுவது ஆகும். ஒரு தனிமத்தின் அல்லது மூலக்கூற்றின் நிறையினை வெறும் எண்களால் குறிப்பிடுவது வழக்கம். மாறாக அதனை கிராமில் கூறுவது "கிராம் அணு" அல்லது "கிராம் மூலக்கூறு" (Gram molecule) எனப்படும்.

ஆக்சிஜனின் அணு நிறை 16. இப்போது 16 கிராம் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டால் அது ஆக்சிஜனைப் பொறுத்தமட்டில் ஒரு கிராம் அணுவாகும்.

நீரின் முலக்கூறு H2O ஆகும். இப்போது 18 கிராம் நீர், ஒரு கிராம் மூலக்கூறாகும் (நீருக்கு).

இவற்றையும் பார்க்கதொகு

உசாத்துணைதொகு

  • Dictionary of science- ELBS
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராம்_அணு&oldid=1450098" இருந்து மீள்விக்கப்பட்டது