கிரிசுத்தாபர் ஆசர் ரே
கிரிசுத்தாபர் ஆசர் ரே (Christopher Asher Wray திசம்பர் 17, 1966) என்பவர் அமெரிக்க வழக்கறிஞர் ஆவார். தற்போது கிங் ஆண்டு ஸ்பால்டிங் என்ற வழக்கறிஞர் நிறுவனத்தில் பங்காளராக இருக்கிறார்.[1]
கிரிசுத்தாபர் ஆசர் ரே Christopher A. Wray | |
---|---|
பிறப்பு | 17 திசம்பர் 1966 (அகவை 57) நியூயார்க்கு நகரம் |
படித்த இடங்கள் |
|
கையெழுத்து | |
ஜார்ஜ் புஷ் அமெரிக்கக் குடியரசு தலைவராக இருந்தபொழுது நிருவாகத்தில் இவர் துணை அட்டார்னி ஜெனரலாக பதவி வகித்தார். தற்போதைய குடியரசுத் தலைவர் டோனால்ட் டிரம்ப் இவரை பெடரல் புலனாய்வுத் துறையின் இயக்குநராக அமர்த்திட முடிவு செய்து டுவிட்டரில் அறிவித்தார்.[2]
சட்டத் தொழில் அனுபவம்
தொகு- யேல் பல்கலைக் கழகச் சட்டப்பள்ளியில் படித்துப் பட்டம் பெற்றார்.
- லா ரிவ்யூ என்ற ஓர் இதழின் பதிப்பு ஆசிரியர் ஆனார்.
- பெடரல் நீதிபதி ஒருவரிடம் எழுத்தராகப் பணி செய்தார். பல ஆண்டுகள் அரசுத் தரப்பு வழக்கறிஞராக இருந்தார்.
- குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ் தலைமையின் நிருவாகத்தில் நீதித்துறையின் குற்றப்பிரிவில் 2003 முதல் 2005 வரை துணை அட்டர்னி ஜெனரல் பதவியில் பணியாற்றினார்.[3]
மேற்கோள்
தொகு- ↑ http://www.cnn.com/2017/06/07/politics/christopher-wray-who-is-next-fbi-director/index.html
- ↑ http://indiatoday.intoday.in/story/us-president-donald-trump-christopher-wray-fbi-director/1/972980.html
- ↑ http://www.thehindu.com/news/international/christopher-wray-is-trumps-pick-as-new-fbi-director/article18772330.ece