கிரிதர் மெட்ராசு

இந்திய வேதிப் பொறியாளர்

கிரிதர் மெட்ராசு (Giridhar Madras) ஓர் இந்திய இரசாயனப் பொறியாளர் ஆவார். இவர் இந்திய அறிவியல் கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.[1] சுவர்ண செயந்தி உறுப்பினர், ஜே.சி.போசு தேசிய உறுப்பினர், சாந்தி சுவரூப் பட்நாகர் பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.[2] 550 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பத்திரிகை கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 20,000 மேற்கோள்கள் இவருடைய கட்டுரைகளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.[3] இந்த எண்ணிக்கை இந்தியாவில் பொறியியல் துறையில் பணிபுரியும் கிரிதரை மிகவும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட விஞ்ஞானிகளில் ஒருவராக ஆக்குகிறது. 50 முனைவர் பட்ட மாணவர்கள் உட்பட 100 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டம் பெறுவதற்கு காரணமாக இருந்துள்ளார்.[4] இந்திய அறிவியல் கழக வாழ்க்கையைப் பற்றி [5] ஒரு வலைப்பதிவையும் கிரிதர் எழுதுகிறார்.

கிரிதர் மெட்ராசு
Giridhar Madras
பிறப்பு27 செப்டம்பர் 1967 (1967-09-27) (அகவை 57)
சேலம்
துறைவேதியியல்

ஒரு முனைவர் பட்டதாரி மாணவர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகார் மற்றும் கழகத்தின் உள் புகார்க் குழுவின் விசாரணையின் பின்னர், குற்றச்சாட்டு உண்மை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அறிவியல் கழகத்தின் நிர்வாகக் குழு கிரிதரை அக்டோபர் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் "கட்டாய ஓய்வு" பெறச் சொன்னது. முதலில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி தேவதாசு, பேராசிரியரின் கட்டாய ஓய்வுக்கு தடை விதித்தார். கிரிதர் மெட்ராசு 7 ஜனவரி 2019 அன்று, விசாரணை செயல்பாட்டில் பல சட்ட மீறல்கள் நிகழ்ந்தன என்று சுட்டிக்காட்டினார். ஓய்வு பெறுவதற்கு முன் அறிவியல் கழகம் இவருக்கு காரணம் கேட்புக் குறிப்பாணை எதுவும் வழங்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். பேராசிரியர் கூறிய காரணங்களை நீதிமன்றம் ஒத்துக்கொண்டது. அந்தப் பெண்ணும் தனது முதல் புகாருக்கு பேராசிரியரின் பதிலில் திருப்தி அடைந்தார் என்பதால் வழக்கு இறுதியில் முடிக்கப்பட்டது.[6] அதன்பிறகு, 6 ஆகத்து மாதம் 2019 அன்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி பி.பி.பசந்திரி, மேற்கூறிய வழக்கில் பேராசிரியர் கிரிதர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறி கிரிதர் மெட்ராசை விடுவித்தார். பாலியல் துன்புறுத்தல் மற்றும் விசாரணை நடவடிக்கைகள் பற்றிய புகார் எழுப்பிய அறிவியல் கழக இயக்குநர் மற்றும் தொடர்புடைய நபர்கள் மீது மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.[7][8] "

பணியாற்றும் ஆசிரியர் மற்றும் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பாத அறிவியல் கழக நிறுவனம், மேற்கண்ட முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. பேராசிரியர் கிரிதர் மெட்ராசு மற்றும் நிர்வாகம் இடையே ஏற்பட்ட தீர்வைத் தொடர்ந்து மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்வின் விதிமுறைகள் ரகசியமானவை. கிரிதர் மெட்ராசு டிசம்பர் 7 அன்று தன்னார்வ ஓய்வு பெற்று நிறுவனத்தை விட்டு வெளியேறினார் ( வழக்கு WA 3681/2019 ).

மேற்கோள்கள்

தொகு
  1. "IISc Honours 8 Faculty Members". http://www.newindianexpress.com/cities/bengaluru/IISc-Honours-8-Faculty-Members/2015/05/10/article2806737.ece. 
  2. "Shanti Swarup Bhatnagar Awards 2009" (PDF). Archived from the original (PDF) on 27 March 2017. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
  3. "Giridhar Madras".
  4. "Giridhar Madras - Students".
  5. http://giridharmadras.blogspot.com
  6. "IISc prof in #MeToo row gets relief from high court". https://www.deccanherald.com/city/iisc-prof-metoo-row-gets-711905.html. 
  7. "HC directs action against IISc. director". https://www.thehindu.com/news/cities/bangalore/hc-directs-action-against-iisc-director/article28838100.ece. 
  8. "Cleared of #MeToo, IISc professor Madras returns".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிதர்_மெட்ராசு&oldid=4162381" இலிருந்து மீள்விக்கப்பட்டது