கிரித்குமார் மன்சுக்லால் ஆச்சார்யா
கிரித்குமார் மன்சுக்லால் ஆச்சார்யா (Kiritkumar Mansukhlal Acharya) என்பவர் ஓர் இந்திய தோல் மருத்துவராவார். தொழுநோயை ஒழிப்பதற்கான சேவைகளுக்காக இவர் நன்கு அறியப்படுகிறார்.[1][2][3] மருத்துவம் மற்றும் சமூக சேவைத் துறைகளில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக, 2014 ஆம் ஆண்டு இந்திய அரசு நான்காவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கி சிறப்பித்தது.[4]
கிரித்குமார் மன்சுக்லால் ஆச்சார்யா Kiritkumar Mansukhlal Acharya | |
---|---|
ஆக்சார்யா பத்மசிறீ விருது பெறும் நிகழ்வு | |
பிறப்பு | இந்தியா, குசராத்து, சவுராசுட்டிரா |
பணி | தோல் மருத்துவர் |
மருத்துவப் பணிவாழ்வு |
கிரித்குமார் மன்சுக்லால் ஆச்சார்யா பொதுவாக இவரது பிரபலமான பெயரான கே.எம். ஆச்சார்யா என்ற பெயரால் அதிகமாக அறியப்படுகிறார்.[2] இவர் மேற்கு இந்திய மாநிலமான குசராத்தில் உள்ள சவுராசுடிராவைச் சேர்ந்தவராவார்.[1] இவரது மருத்துவ வாழ்க்கை முக்கியமாக இயாம்நகரில் உள்ள எம். பி. சா மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் தோல், பாலியல் பரவும் நோய்கள் மற்றும் தொழுநோய் துறைகளின் தலைவராகவும் கழிந்தது.[3] பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரித்குமார் மகாத்மா காந்தி தொழுநோய் சங்கத்தை நடத்தி வருகிறார்.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "27 recipients from the field of medicine in Padma awards 2014". Medicos India. 28 January 2014. Archived from the original on 2 November 2014. பார்க்கப்பட்ட நாள் 2 November 2014.
- ↑ 2.0 2.1 2.2 "7 Gujaratis in Padma awards list". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 January 2014. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/7-Gujaratis-in-Padma-awards-list/articleshow/29383553.cms. பார்த்த நாள்: 5 November 2019.
- ↑ 3.0 3.1 3.2 "Dr Neelam Kler to be conferred with Padma Bhushan award". India Medical Times. 26 January 2014. Archived from the original on 5 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 5 November 2019.
- ↑ "List of Padma Awardees for the year 2014". CNN-News18. 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 5 November 2019.
புற இணைப்புகள்
தொகு- "Sehat". Sehat. 30 January 2014. பார்க்கப்பட்ட நாள் 5 November 2019.