படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள்

(கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புலமைச் சொத்துக்களை இணையத்திலும் வேறு வடிவங்களிலும் பகிர்வதற்காக படைப்பாக்கப் பொதுமங்கள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட உரிம ஒப்பந்தங்கள், படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் எனப்படுகிறன.

படைப்பாக்கப் பொதுமங்கள் அமைப்பானது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான ஆறு உரிம ஒப்பந்தங்களை தயாரித்து வழங்கியிருக்கிறது. அவ்வாறு உரிமங்களும் படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் என அழைக்கப்படுகிறன.

மூல உரிமங்கள்

தொகு

இந்த உரிமங்களின் துல்லியமான கட்டளைகள் அவற்றின் வெளியீடு பொறுத்து சற்று வேறுபடுகின்றன.[1][2][3]

  குறிப்பிடுதல்/Attribution (by) ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தகுந்த முறையில் அல்லது வேண்டப்பட்ட முறையில் படைப்பாளிகள் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
  வர்த்தகநோக்கமற்ற/NonCommercial (nc)

ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க, வழிபொருட்களை உருவாக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் வர்த்தக நோக்கமற்ற நோக்கங்களுக்கு மட்டுமே.

  வழிப்பொருளற்ற/NoDerivs (nd)

ஆக்கங்களை படியெடுக்க, விநியோகிக்க, காட்சிப்படுத்த, இயக்க ஆகிய உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் வழிபொருட்களை உருவாக்குவதற்கான உரிமை தரப்படவில்லை.

  அதே மாதிரிப் பகிர்தல்/ShareAlike (sa) வழிபொருட்களை முதன்மை ஆக்கத்துக்குரிய அதே உரிமங்களோடே விநியோகிக்க முடியும்.

ஆறு முதன்மை உரிமங்கள்

தொகு

ஆக்கப்பணி ஒன்றினை படைப்பாக்கப் பொதுமங்கள் உரிமைப்படி வழங்கும்போது தெரிவு செய்யப்படக்கூடிய முதன்மையான ஆறு உரிம ஒப்பந்த வகைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன. குறைந்த கட்டுப்பாடுகள் கொண்ட உரிமத்தில் இருந்து கூடிய கட்டுப்பாடுகள் கொண்டது வரை இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இலட்சனை விவரணம் சுருக்கப் பெயர்
  குறிப்பிடுதல் மட்டும் BY
  குறிப்பிடுதல் + வழிப்பொருளற்ற BY-ND
  குறிப்பிடுதல் + அதே மாதிரிப் பகிர்தல் BY-SA
  குறிப்பிடுதல் + வர்த்தகநோக்கமற்ற BY-NC
  குறிப்பிடுதல் + வர்த்தகநோக்கமற்ற + வழிப்பொருளற்ற BY-NC-ND
  குறிப்பிடுதல் + வர்த்தகநோக்கமற்ற+ அதே மாதிரிப் பகிர்தல் BY-NC-SA

குறிப்பிடுதல் (by)

தொகு

படைப்பாக்கப் பொதுமங்கள் வழங்கும் ஒப்பந்தங்களில் இதுவே கட்டுப்பாடுகள் குறைந்த ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தத்தின் படி நீங்கள் உங்கள் ஆக்கத்தினை வழங்கும்போது, உங்கள் ஆக்கத்தில் மாற்றங்கள் செய்ய, பயன்படுத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அத்தோட்டு உங்கள் ஆக்கத்தினை அல்லது மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய ஆக்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் அனுமதி உண்டு. உங்கள் ஆக்கத்தினை எது வேண்டுமானாலும் செய்யமுடியும். ஆனால் என்ன செய்தாலும் உங்கள் பெயரை குறிப்பிட்டாகவேண்டும். அதுவே இந்த ஒப்பந்தத்தின் ஒரேயொரு கட்டுப்பாடு.

சுருக்கமாக

  • ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.
  • மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டுமென்றில்லை.

ஒப்பந்த உரை

குறிப்பிடுதல் - அதே மாதிரிப் பகிர்தல் (by-sa)

தொகு

இந்த ஒப்பந்தமானது உங்கள் ஆக்கப்பணியினை மாற்ற, திருத்த, அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க என்று சகலதிற்கும் மற்றவரை அனுமதிக்கிறது. புதிய ஆக்கத்தினை வர்த்தக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த முடியும். ஆனால், அவ்வாறு பகிரப்படும் வேளையில் உங்கள் ஆக்கமோ அல்லது அதனை அடிப்படையாககொண்டு உருவாகும் புதிய ஆக்கமோ உங்கள் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்தோடு நீங்கள் பயன்படுத்திய உரிம ஒப்பந்தத்தை அப்படியே பயன்படுத்தவேண்டும்.

சுருக்கமாக

  • ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.
  • மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டும்.

ஒப்பந்த உரை

குறிப்பிடுதல் - வழிப்பொருளற்ற (by-nd)

தொகு

உங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்யாமல், உங்கள் பெயரை காட்டாயம் குறிப்பிடும் வரைக்கும் வர்த்தக ரீதியான அல்லது வர்த்தக நோக்கம் அல்லாத எந்த் தேவைக்காகவும் உங்கள் ஆக்கத்தினை மீள விநியோகிக்க, பகிர்ந்துகொள்ள இவ்வொப்பந்தம் அனுமதியளிக்கிறது.

சுருக்கமாக

  • ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.
  • மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை.
  • வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டுமென்றில்லை.

ஒப்பந்த உரை

குறிப்பிடுதல் - வர்த்தக நோக்கமற்ற (by-nc)

தொகு

இவ்வுரிமம் வர்த்தக நோக்கம் தவிர்ந்த தேவைகளுக்காக உங்கள் ஆக்கத்தினை திருத்த, வடிவம் மாற்ற, மீள்சுழற்சிக்குட்படுத்த அனுமதிக்கிறது. இந்த ஒப்பந்தத்திலும் உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு புதிதாக உருவாக்கப்படும் ஆக்கத்தில் உங்கள் பெயர் குறிப்பிடப்பட வேண்டும், வர்த்தக நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால் ஒரேயொரு வித்தியாசம், உங்கள் ஆக்கம் தாங்கியுள்ள உரிம விதிகளுக்கு அமைவாகத்தான் புதிதாக உருவாக்கப்படும் ஆக்கத்தையும் விநியோகிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

சுருக்கமாக

  • ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.
  • மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது
  • வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை.
  • இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழவேண்டுமென்றில்லை.

ஒப்பந்த உரை

குறிப்பிடுதல் - வர்த்தக நோக்கமற்ற - அதே மாதிரிப் பகிர்தல்(by-nc-sa)

தொகு

இந்த ஒப்பந்தம், மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தை மீள்சுழற்சிக்குட்படுத்த, மாற்றங்கள் செய்ய, தொகுக்க, உங்கள் ஆக்கத்தைனை அடிப்படையாக வைத்து புதிய ஆக்கங்களை செய்ய அனுமதிக்கிறது. ஆனால் மாற்றம்ச் எய்யப்பட்டு வெளியிடப்படும் புதிய ஆக்கம், உங்கள் பெயரை குறிப்பிட வேண்டும் அத்தோடு இதே அனுமதிகளை அப்புதிய ஆக்கமும் வழங்க வேண்டும். மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தினை தரவிறக்கவும் பகிர்ந்தளிக்கவும் முன்னைய ஒப்பந்தம் போன்றே இதுவும் அனுமதிக்கிறதென்றாலும், உங்கள் ஆக்கத்தில் மாற்றங்கள் செய்ய அனுமதிப்பதே இவ்வொப்பந்தத்தின் சிறப்பு. உங்கள் ஆக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு புதிதாக உருவாக்கப்படும் ஆக்கங்களும் நீங்கள் வழங்கிய உரிமத்தினடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதால் புதிய உருவாக்கங்களையும் வர்த்தகத் தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது.

சுருக்கமாக

  • ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.
  • மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்பட்டுள்ளது
  • வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை
  • இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும்.

ஒப்பந்த உரை

குறிப்பிடுதல் - வர்த்தகநோக்கமற்ற, வழிப்பொருளற்ற(by-nc-nd)

தொகு

இதுவே முதன்மையான ஆறு உரிம ஒப்பந்தங்களிலும் கட்டுப்பாடுகள் கூடியதாகும். இது மீள் விநியோகத்தை அனுமதிக்கிறது. இவ்வுரிம ஒப்பந்தம் "இலவச விளம்பர" ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், உங்கள் ஆக்கவேலையை தரவிறக்கவும், மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும் இது எல்லோரையும் அனுமதிக்கிறது. ஆனால் பகிரப்படும்போது உங்களது பெயர், உங்களுக்கான தொடுப்பு போன்றவற்றையும் வழங்க வேண்டும். பகிர்பவர்கள் உங்கள் ஆக்கப்பணியில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும் முடியாது. மாற்றங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் இயல்பாகவே உங்கள் ஆக்கத்தினை பகிரும்போது இதே உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே விநியோகம் நிகழும்.

சுருக்கமாக

  • ஆக்குநர் பெயர் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும்.
  • மாற்றம் செய்தல், புத்தாக்கங்களுக்கு அடிப்படையாக பயன்படுத்துதல் அனுமதிக்கப்படவில்லை.
  • வர்த்தக நோக்கம் கருதிய பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை
  • இதே உரிமத்தினடிப்படையிலேயே பகிர்தல் நிகழும்.

ஒப்பந்த உரை

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Shergill, Sanjeet (2017-05-06). "The teacher's guide to Creative Commons licenses". Open Education Europa. Archived from the original on June 26, 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-03-15.
  2. "What are Creative Commons licenses?". Wageningen University & Research. June 16, 2015. Archived from the original on March 15, 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-03-15.
  3. "Creative Commons licenses". University of Michigan Library. Archived from the original on November 21, 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-03-15.

வெளி இணைப்புக்கள்

தொகு

(ஆங்கில மொழியில்)