கிரீசு மாத்ரூபூதம்

கிரீசு மாத்ரூபூதம் ( Girish Mathrubootham 29 மார்சசு 1975 ) தொழில் நுட்பவியலாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். பிரெசுடெஸ்க்  என்ற சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

கிரீசு மாத்ரூபூதம்
பிறப்பு29 மார்ச்சு 1975 (அகவை 49)
திருச்சிராப்பள்ளி
படித்த இடங்கள்
பணிவணிகர்

படிப்பு

தொகு

தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த கிரீசு மாத்ருபூதம் சாத்திரா பொறியியல் கல்லூரியில் மின் பொறியியலும்  பின்னர் எம்பிஏ கல்வியும் படித்துப் பட்டம் பெற்றார். இவர் மின் பொறியியல் படித்தாலும் நண்பர்களின் தொடர்பாலும் தூண்டுதலாலும் ஜாவா கோர்சில்  சேர்ந்து படித்தார்.[1]

பணிகள்

தொகு

அமெரிக்காவில் வேலை வாய்ப்புக் கிடைத்து அங்கு சென்று பணியாற்றினார். பின்னர் இந்தியாவுக்குத் திரும்பி சோகோ என்ற தொழில் நுட்பக் குழுமத்தில் சேர்ந்தார். 10 ஆண்டுகள் அந்நிறுவனத்தில் வேலை செய்தபின் வென்ச்சர்  கேப்பிட்டல் உதவியுடன் பிரெசு டெஸ்க் நிறுவனத்தைத் தொடங்கினார். பிரெசு டெஸ்க் நிறுவனம் தற்பொழுது 50000 வாடிக்கையாளர்களையும் 500 ஊழியர்களையும் கொண்டுள்ளது. மேலும் இவர் 6 நிறுவனங்களைக் கையகப்படுத்தி தொழிலில் வெற்றி பெற்றுள்ளார்.[2]

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரீசு_மாத்ரூபூதம்&oldid=2734414" இலிருந்து மீள்விக்கப்பட்டது