கிருஷ்ணகிரி மாவட்டத் தொழில் மையம்

கிருஷ்ணகிரி மாவட்டத் தொழில் மையம் என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி நகரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ளது.

இம்மையமானது படித்த வேலையற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் துவங்கி தங்களுக்கு தாங்களே வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொள்ள உதவுகிறது. இம்மையம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வேலை தொடங்குவதற்காக மானியம் வழங்கவும் வழி வகை செய்கிறது. குறிப்பிட்ட மாவட்டத் தொழில் மையம் அமைந்துள்ள இடத்தில் சிறு தொழில் தொடங்குவதற்கு தேவையான முதுகெலும்பாக அமைகிறது. சுய வேலை வாய்ப்பு வளர்ச்சிக்கு ஒரு பாலமாக விளங்குகிறது. மாவட்டத் தொழில் மையம் வறுமையில் வாடும் குடும்பங்கள் வளர்வதற்கு உதவுகிறது.

மையத்தின் பணிகள் தொகு

இம்மையம் தொழில் தொடங்க திட்ட அறிக்கை வழங்கி வருகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் ஒருமுனை தீர்வுக்குழு மூலம் தொழில் தொடங்க அனுமதி மற்றும் உரிமை பெற உதவி செய்கிறது. தொழில் தொடங்க பாதுகாப்பு சேவை அளிக்கிறது. கைத்தொழில் மற்றும் குடிசைத் தொழில் பதிவு செய்யப்படுகிறது. ஊராட்சி ஒன்றியம் தோறும் ஊக்குவிப்பு முகாம் நடத்துகிறது. தொகையுடன் கூடிய மகளிர் மற்றும் பொது தொழில் முனைவோர் பயிற்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சிறு தொழில் நிறுவனங்கள் தரச் சான்றிதழ் பெற உதவுகிறது.