கிருஷ்ணன் பதக்கம்
கிருஷ்ணன் பதக்கம் (Krishnan Medal) என்பது இந்தியப் புவி இயற்பியல் ஒன்றியத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்தியப் புவியியல் விருது ஆகும்.[1] புகழ்பெற்ற புவியியலாளர் எம். எஸ். கிருஷ்ணன் நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது.
கண்ணோட்டம்
தொகுஇந்தியப் புவி இயற்பியல் ஒன்றியம், புவி இயற்பியல்/புவியியல் மற்றும் தொடர்புடைய புவி அறிவியலின் குறிப்பிட்ட பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக, 40 வயதைத் தாண்டாத (ஆண்டின் சனவரி 1ஆம் தேதி) சிறந்த புவி இயற்பியலாளர்/புவியியலாளருக்கு ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணன் பதக்கம் வழங்குகிறது.
விண்ணப்பம்
தொகுஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணன் பதக்கம் வழங்குவதற்காக நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பதக்கம் பெற்றவர்கள் மற்றும் கடந்த கால தலைவர்களின் பரிந்துரைகளைக் கோரி, விருதிற்குத் தேர்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைக்கிறது. பதக்கம் வென்றவருக்கு அடுத்த ஆண்டு கூட்டத்தில் விருது வழங்கப்படும். 1993 முதல் தங்கப் பதக்கம் பெறுநருக்கு வழங்கப்படுகிறது.
விண்ணப்பம், தன் விவரக்குறிப்புடன், விண்ணப்பதாரரின் 3 முக்கிய வெளியீடுகளின் மறுபதிப்புகளின் 4 நகல்களுடன், இந்தியப் புவி இயற்பியல் ஒன்றியத்தின் செயலாளருக்கு, சூலை 31 ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும்.
விருது பெற்றவர்கள்
தொகுஆதாரம்: IGU
- 1964 மாணிக் தல்வானி
- ''1965 தேவேந்திர லால்
- '1966' எச்.எம். ஐயர்
- '1967' எஸ்.பாலகிருஷ்ணா
- '1968' ஏ.ஜெயராமன்
- '1969' சுப்ரியா ராய்
- '1970 சி.ராதாகிருஷ்ண மூர்த்தி
- ''1971 டி.என். அவஸ்தி
- ''1972 டி. குப்தா சர்மா
- '1973' கே.வி.ராகவ ராவ்
- ''1974 ஜே. ஜி. நேகி
- '1975' ஆர்.கே.வர்மா
- ''1976 கே. எல். கைலா
- '1977' எம்.பி.ராமச்சந்திரன் நாயர்
- 1978 எச். கே. குப்தா
- ''1979 வி. கே. கவுர்
- '1980' எஸ்.கே.வர்மா
- '1981' எஸ்.கிருஷ்ணசாமி
- '1982' கே.கோபாலன்
- '1983' ஐ.வி.ராதாகிருஷ்ண மூர்த்தி
- 1984 பி. எச். பிரிஸ் கிஷோர்
- '1985' எஸ். கே. டாண்டன்
- '1986' விருது இல்லை
- '1987' ஆர் .கே. திவாரி
- ''1988 ஏ. கே. சிங்வி
- ''1989 எஸ். தாஸ்குப்தா
- ''1990 விருது இல்லை
- 1991 எஸ். எஸ். ராய்
- '1992' விருது இல்லை
- ''1993 குசலா ராஜேந்திரன்
- '1994' ராஜீவ் நிகாம்
- '1995' அனில் குமார்
- ''1996 கொல்லுரு ஸ்ரீ கிருஷ்ணா, கே. சைன்
- '1997' பி.திவாகர் நாயுடு
- ''1998 ரணதிர் முகோபாத்யாய்
- '1999 ஏ.கே.சௌபே
- '2000' எம்.ராதாகிருஷ்ணா மற்றும் ஒய்.வி.பி.சர்மா
- '2001' பி.செங்குப்தா
- '2002' பி. எஸ். தயா சாகர்[2]
- '2003' விருது இல்லை
- ''2004 U. குல்ஸ்ரேஸ்தா மற்றும் அஜய் மங்லிக்
- '2005 வி.சக்கரவர்த்தி
- 2006 வினீத் கே. கஹலாட் மற்றும் நிலாய் கரே
- 2007 சலபதி ராவ், லக்ஷ்மிதர் பெஹெரா
- ''2008 வீரேந்திர மணி திவாரி, அபயராம் பன்சால்
- ''2009 ஜோதிரஞ்சன் ஸ்ரீசந்தன் ரே
- '2010' பிரகாஷ் குமார் மற்றும் ஹேது சி. ஷேத்
- '2011' பிரதீப் ஸ்ரீவத்சவா மற்றும் பி. பிரசாந்த குமார் பட்ரோ
- '2012' எம். ராம் மோகன் மற்றும் ராஜேஷ் அக்னிஹோத்ரி
- '2013 சௌமென் மைதி மற்றும் செந்தில் குமார்
- '2014 பவன் தேவாங்கன்
- '2015' பார்த்தசாரதி சக்ரவர்த்தி; எம்.எஸ். கிரிஷ் குமார்
- '2016' உமா சங்கர்
- 2017 நிமிஷா வேதாந்தி மற்றும் தேவெலீனா மணி
மேலும் பார்க்கவும்
தொகு- புவியியல் விருதுகளின் பட்டியல்
- புவி இயற்பியல் விருதுகளின் பட்டியல்
- பூமி அறிவியல் விருதுகளின் பட்டியல்
குறிப்புகள்
தொகு- ↑ "Home". igu.in.
- ↑ "B S தயா சாகரின் முகப்பு பக்கம்".