கிரைக்கோ நீக்க வினை
கிரைக்கோ நீக்க வினை (Grieco elimination) என்பது ஓர் அலிபாட்டிக் முதனிலை ஆல்ககால் செலீனைடு உதவியால் நீக்க வினைக்கு உட்பட்டு விளிம்புநிலை ஆல்க்கீனாக மாறும் வினையைக் குறிக்கிறது [1][2]. பால் கிரைக்கோ கண்டறிந்த காரணத்தால் வினைக்கு இப்பெயர் இடப்பட்டது.
ஆல்ககால் முதலில் எலக்ட்ரான் குறைந்த செலீனியத்தின் மீது உட்கருகவர் பதிலீட்டு வினையின் வழியாக ஆர்த்தோ-நைட்ரோபீனைல்செலீனோசயனேட்டு மற்றும் டிரைபியூட்டைல் பாசுப்பீனுடன் வினைபுரிந்து ஒரு செலீனைடு சேர்மமாக உருவாகிறது. இரண்டாவது படிநிலையில் செலீனைடு ஐதரசன் பெராக்சைடால் ஆக்சிசனேற்றப்பட்டு செலீனாக்சைடைக் கொடுக்கிறது. இக்கட்டமைப்பு சிதைவடைந்து ஒற்றை மூலக்கூற்று வினை வழிமுறையால் ( Ei நீக்க வினை வழிமுறை) ஆல்க்கீனாக மாறுகிறது. கோப் நீக்க வினையில் நிகழ்வது போல செலீனால் இவ்வினையில் நீக்கப்படுகிறது. தேனிசுசெப்சிகை டேக்சால் ஒட்டுமொத்த தொகுப்பு வினையில் கார்பன் வளையத்தை தொகுக்கும் வினையில் இவ்வினை பங்கேற்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ^ Organoselenium chemistry. A facile one-step synthesis of alkyl aryl selenides from alcohols Paul A. Grieco, Sydney Gilman, Mugio Nishizawa; J. Org. Chem.; 1976; 41(8); 1485-1486. எஆசு:10.1021/jo00870a052
- ^ Olefin synthesis. Rate enhancement of the elimination of alkyl aryl selenoxides by electron-withdrawing substituents K. Barry Sharpless and Michael W. Young J. Org. Chem.; 1975; ; 947 - 949. எஆசு:10.1021/jo00895a030