கிறிசு பிரீமேன்
கிறிசு பிரீமேன் (Chris Freeman) ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்குட்பட்ட வேல்சு நாட்டின் பாங்கோர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒரு பிரித்தானிய சுற்றுச்சூழல் விஞ்ஞானியாவார். பாங்கோரிலுள்ள உள்ள இயற்கை அறிவியல் கல்லூரியில் நீர்வாழ் உயிரிகள் பிரிவின் வேதியியல் பேராசிரியராக உள்ளார். [1] பிரீமேனின் ஆராய்ச்சியானது கார்பன் சுழற்சியில் கவனம் செலுத்துகிறது, மேலும் தூள்கரி மண்ணில் கார்பன் சேமிப்பு மற்றும் கரைந்த கரிம கார்பனின் இயக்கவியல் தொடர்பான ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. [2] குறிப்பாகத் தூள்கரி மண்ணில் நொதிகளின் செயல்பாட்டு பொறிமுறையும் நீரில் கரைந்த கரிம கார்பனின் செறிவுகள் அதிகரித்து வரும் போக்கைக் கவனிப்பதிலுமான இவரது பணி மிகவும் பிரபலமானதாகும்.
கிறிசு பிரீமேனின் பணி அமெரிக்க நன்னீர் உயிரியல் மற்றும் ஆழ்கடல் அறிவியல் சங்கம்[3] மற்றும் இராயல் அறிவியல் கழகத்தின் விருதுகளுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [4]
வெளியீடுகள்
தொகு- Freeman C, Ostle J, Kang H (2001). An enzymic latch on a global carbon store. Nature. 409, 149.
- Freeman C, C. D. Evans, D. T. Monteith, B. Reynolds and N. Fenner (2001) Export of organic carbon from peat soils. Nature 412, 785.
- Freeman C, Fenner N, Ostle NJ, Kang H, Dowrick DJ, Reynolds B, Lock MA, Sleep D, Hughes S and Hudson J. (2004) Dissolved organic carbon export from peatlands under elevated carbon dioxide levels Nature 430, 195 – 198.
- Bragazza L, Freeman C, T Jones, H Rydin, J Limpens, N Fenner, T Ellis, R Gerdola, M Hajek, T Hajek, P Iacumin, L Kutnark, T Tahvanainen, H Toberman. (2006) Atmospheric nitrogen deposition promotes carbon loss from peat bogs Proceedings of the National Academy of Sciences of the United States of America 103(51): 19386-19389
மேற்கோள்கள்
தொகு- ↑ "home page". Archived from the original on 2020-09-28. பார்க்கப்பட்ட நாள் 2021-08-08.
- ↑ Peat bog gases 'accelerate global warming by Steve Connor
- ↑ Awards by Lynne Williams 9 May 1997 in Times Higher Education
- ↑ The Royal Society Mullard Award (1967) 2007 winner The Royal Society