கிறித்தென் செல்கிரென்
கிறித்தென் செல்கிரென் (Kristen Sellgren) ஓய்வு பெற்ற ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவர். இவர் ஓகியோ அரசு பல்கலைக்கழகத்தில் இயற்கை, கணிதப் புலங்கள் கல்லூரியில் தகைமைப் பேராசிரியர் ஆவார். இவர் 1990 இல் வானியலுக்கான நியூட்டன் இலாசி பரிசை வென்றார்.[1] இவர் அமெரிக்க வானியல் கழகத்தில்SGMA குழுவை நிறுவினார். இந்தக் குழு வானியலில் பாலினச் சிறுபான்மையர் நலனுக்காக உருவாக்கப்பட்டது.[2]
கல்வியும் வாழ்க்கைப் பணியும்
தொகுஇவர் சாந்தியாகோவில் அமைந்த கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1976 இல் இயற்பியலில் இளவல் பட்டம் பெற்றார். இவர் 1983 இல் பி. டி. சாயிபெர், ஜி. நியூகெபவுவேர் ஆகியஓர் வழிகாட்டலில் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவரது பட்ட ஆய்வுத் தலைப்பு "ஒளித்தெறிப்பு ஒண்முகில்களின் அகச்சிவப்புக் கதிரண்மை ஆய்வு."[3] இவர் பால்வழியின் மையம் உடுக்கணவெளித் தூசு அகச்சிவப்புக் கதிர் வானியல் ஆகிவற்றில் வல்லுனர் ஆவார்.[4]
இவர் தன் இளவல் பட்டம் பெற்றது பியுயெர்டோ இரிகோவில் அமைந்த அரெசிபோ வான்காணகத்தில் கோடை ஆய்வு நலகைப் பணியை முடித்துள்ளார். முனைவர் பட்டம் பெற்றதும், மேரிலாந்து, பால்ட்மோர் விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தில் முதுமுனவர் ஆய்வு செய்தார். இவர் 1984 இல் அவாய் பல்க்லைக்கழக வானியல் நிறுவனத்தில் முதலில் உதவி வானியலாளராகவும் 1989 முதல் இணை வானியலாளராகவும் பணிபுரிந்தார்.
இவர்1990 முதலாக ஓகியோ பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்து பல பதவிகளில் இருந்துள்ளார். இவர் பிறகு 1994 இல் இணைப் பெராசிரியர் ஆனார்; 2000 இல் இவர் முழுப் பேராசிரியர் ஆனார்; 2011 இல் தகைமைப் பேராசிரியர் பதவியை அடைந்தார்.ஈதற்கிடையில் 2000 இல் ஆசுட்டினில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் வருகைதரு பேராசிரியராக இருந்துள்ளார்.
தகைமைகளும் விருதுகளும்
தொகுஇவர் 1973 இல் தேசியத் தகைமை அறிஞராக வெற்ரிகண்டு உரிய நல்கையைப் பெற்றார், அதே ஆண்டில், சாந்தியாகோ கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயர்புலமைக்கான ஆய்வுநல்கையைப் பெற்றார், இவருக்கு 1990 இல் நியூட்டன் இலாசி பியர்சு பரிசும் வழங்கப்பட்டது. பிறகு இவர் 1991 முதல் 1993 வரை ஆல்பிரெடு பி. சுலோவன் ஆய்வுநல்கையையும் பெற்றார். இவர் அமெரிக்க அறிவியல் மேனம்பாட்டுக் கழகத்தின் ஆய்வு உறுப்பினராக 2011 இல் தேர்வானார். இவர் அமெரிக்க வானியல் கழகத்திலும் பன்னாட்டு வானியல் ஒன்றியத்திலும் நடப்பு உறுப்பினராக உள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Newton Lacy Pierce Prize in Astronomy | American Astronomical Society". aas.org. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
- ↑ "Committee for Sexual-Orientation and Gender Minorities in Astronomy (SGMA) | SGMA". sgma.aas.org. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
- ↑ "Kris Sellgren's CV". www.astronomy.ohio-state.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
- ↑ "Kristen Sellgren | Department of Astronomy". astronomy.osu.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.