கிறிஸ்டி கோல்ட்ஃபஸ்

கிறிஸ்டி கோல்ட்ஃபஸ் (Christy Goldfuss) என்பவர் ஒர் அமெரிக்க அரசாங்க அதிகாரி ஆவார். சுற்றுச்சூழல் தரத்திற்கான குழுவில் 2015 முதல் 2017 வரை பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில், அவரது நிர்வாகத்தின் கீழிருந்த தேசிய பூங்கா சேவையின் துணை இயக்குநராக பணியாற்றினார். [1] அவர் இயற்கை வளங்கள் பற்றிய குழுவில் ஒரு நிருபராகவும், சட்டமன்ற ஊழியராகவும் பணியாற்றினார். [1]

கிறிஸ்டி கோல்ட்ஃபஸ்
Christy Goldfuss
சுற்றுச்சூழல் தர கவுன்சில் தலைவர்
பதவியில்
மார்ச் 2015 - ஜனவரி 20, 2017
குடியரசுத் தலைவர்பராக் ஒபாமா
முன்னையவர்மைக் பூட்ஸ்
பின்னவர்மேரி நியூமேயர்
தேசிய பூங்கா சேவையின் துணை இயக்குநர்
பதவியில்
2013 - மார்ச் 2015
குடியரசுத் தலைவர்பராக் ஒபாமா

பூங்கா சேவையில் சேருவதற்கு முன்பு, அவர் அமெரிக்க முன்னேற்றத்திற்கான மையத்தில் [2] ஒரு தாராளவாத சிந்தனைக் குழுவின் பொது நிலத் திட்டத்தின் தலைவராக இருந்தார். [3]

பராக் ஒபாமாவின் அதிபர் பதவியின் முடிவைத் தொடர்ந்து, கோல்ட்ஃபஸ் மீண்டும் அமெரிக்க முன்னேற்றத்திற்கான மையத்தில் சேர்ந்தார். [4] அவர் தேசிய உள்கட்டமைப்பு ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார். [5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "The Council on Environmental Quality". whitehouse.gov. பார்க்கப்பட்ட நாள் 2016-08-17 – via National Archives.
  2. "Christy Goldfuss | Person | Center for American Progress". www.americanprogress.org. Archived from the original on 2016-10-13. பார்க்கப்பட்ட நாள் 2016-08-17.
  3. "Meet Christy Goldfuss, the newest environmental player in the White House". Washington Post. பார்க்கப்பட்ட நாள் 2016-08-17.
  4. RELEASE: CAP Announces Former CEQ Managing Director Christy Goldfuss to Serve as New Vice President for Energy and Environment Policy, Center for American Progress, February 13, 2017
  5. "National Infrastructure Advisory Council Members". Homeland Security. பார்க்கப்பட்ட நாள் 1 September 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்டி_கோல்ட்ஃபஸ்&oldid=3549931" இலிருந்து மீள்விக்கப்பட்டது