கிறித்தவ தமிழ் இலக்கியம்

(கிறிஸ்தவ தமிழ் இலக்கியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிறித்தவம் தொடர்பான தமிழ் இலக்கியங்கள் கிறித்தவ தமிழ் இலக்கியங்கள் ஆகும். கிறித்தவ சமய பின்புலம் கொண்டோர் ஆக்கிய இதர ஆக்கங்களும் கிறித்தவ தமிழ் இலக்கியமாக வகைப்படுத்தப்படுவதுண்டு. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி கிறித்தவ அறிமுகம் தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் நிகழ்கிறது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடும், ஈழமும் கிறித்தவ ஐரோப்பியரின் குடியேற்றவாத ஆட்சிக்கு உட்படுகின்றன. இக்காலத்தில் சாதிக் கொடுமை, சலுகைகள், சமய ஈடுபாடு போன்ற பல காரணங்களால் தமிழர்கள் பலர் கிறித்தவ சமயத்துக்கு மதம் மாறினர்.

கிறித்தவ தமிழ் இலக்கியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி ஐரோப்பியர்களின் தமிழ்ப் பணிகள் ஆகும். சமயத்தைப் பரப்ப அவர்கள் தமிழை கற்றனர். அச்சுப் பணி, அகராதித் தொகுப்பு, மொழிப் பெயர்ப்பு, பேச்சு இலக்கணத் தொகுப்பு, உரைநடை விருத்தி, இலக்கியப் பங்களிப்பு என பல வழிகளில் இவர்கள் பங்களிப்பைச் செய்துள்ளார்கள்.

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு