கிறிஸ்தாயனம் (நூல்)

கிறிஸ்தாயனம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை ஆக்கியவர் ஜான் பால்மர் என்பவர். இதில் இயேசு கிறித்துவின் வரலாறு நான்கு காண்டங்களில் விருத்தப்பாக்களில் பாடப்பட்டுள்ளது.

வெளியீட்டு விவரங்கள்

தொகு

கிறிஸ்தாயனம் என்னும் நூல் நாகர்கோவிலில் 1865ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை வெளியிட்ட நிறுவனம் இலண்டன் மிஷனரி சொசைட்டி என்னும் அமைப்பைச் சார்ந்த இலண்டன் மிஷன் அச்சகம் ஆகும்.

ஆதாரம்

தொகு

இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்தாயனம்_(நூல்)&oldid=3175854" இலிருந்து மீள்விக்கப்பட்டது