கிறிஸ்தேரோ போர்
கிறிஸ்தேரோ போர் (La Cristiada; 1926–29) என்பது கத்தோலிக்க குருக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட ஆளும் மெக்சிகன் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான புரட்சியாகும். இதன் துவக்க காரணியாக 1917 மெக்சிகன் அரசியலமைப்புசட்டத்தின் அமலாக்கம் கருதப்படுகின்றது. இவ்வரசியலமைப்பு மொக்சிக்கோவில் கத்தோலிக்க திருச்சபை மற்றும் அதன் துணை அமைப்புகளின் செல்வாக்கை பாதிக்க பொருட்டு மெக்சிகோவின் குடியரசு தலைவர் புலுடார்சியோ எலியாஸ் காலிஸ் மூலம் நிறுவப்பட்டது. இப்புரட்சி மேற்கு மெக்ஸிக்கோவிலிருந்து துவங்கியது.
மெக்சிகன் அரசு தந்தி கம்பங்களில் வெளிப்படையாக கிறிஸ்தேரோ போராளிகளை தூக்கிலிட்டது. (இப்படம் எடுக்கப்பட்ட இடம்: ஜாலிஸ்கோ, மெக்ஸிக்கோ) இவ்வாறு தூக்கிலிடப்பட்டவர்களின் உடல்கள் அந்த நகர பொது மக்கள் கத்தோலிக்கத்தையும் பிற சமயங்களையும் கைவிடும்வரை தந்தி கம்பங்களிலிலேயே தொங்கவிடப்பட்டுருந்ததன. | |
தேதி | 1926–1929 |
---|---|
நிகழ்விடம் | மெக்சிக்கோ |
பங்கேற்றவர்கள் | மெக்சிகன் அரசும், கத்தோலிக்க மெக்சிகன் புரட்சியாளர்களும் |
விளைவு | கத்தோலிக்க திருச்சபை மெக்சிக்கோவில் பெரிதும் துன்புறுத்தப்பட்டது |
1910இல் நடந்த மெக்சிகன் புரட்சி மெக்சிகோவின் வரலாற்றில் மிகப்பெரிய கிளர்ச்சியாக இருந்தது. இது நிலம் மற்றும் சமூக நீதிக்கான விவசாயிகள் பெரும் தேவையினை அடிப்படையாக கொண்டிருந்தது. தனியாரின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கோடு இப்புரட்சி நடந்ததால், கத்தோலிக்க திருச்சபை இப்புரட்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட புரட்சியாளர்கள் திருச்சபைக்கு எதிராக 1917 மெக்சிகன் அரசியலமைப்புசட்டத்தினை இயற்றினர். ஆயிரக்கணக்கானவர்களின் இறப்புக்கு காரணியான கத்தோலிக்கர்களுக்கு எதிரான 10 ஆண்டு துன்புறுத்தல்களை இச்சட்டம் துவங்கி வைத்தது தொடங்கி.
இச்சட்டத்தினை மெக்சிகன் கத்தோலிக்கர்கள் அமைதியான முறையில் எதிர்த்தாலும், சில காலத்திற்கு பிறகு, 1926ல் சிறு பூசல்களில் துவங்கி வன்முறை மற்றும் புரட்சியாக இது 1927 இல் உறுவாகியது.[1] இப்புரட்சியாளர்கள் தங்களை கிறிஸ்தேரோக்கள் (Cristeros) என கிறிஸ்து அரசரின் பெயரால் அழைத்தனர். இப்புரட்சியில் பெண்களின் பங்கு குறிக்கத்தக்கதாகும். கிளர்ச்சியாளர்களுக்கு துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை பல பெண்கள் கடத்திவந்து போராளிகளுக்கு அளித்தனர். இப்போரின் போது வதைக்கப்பட்டு இறந்த பல குருக்களுக்கு புனிதர் பட்டமளிப்பு நிகழ்ந்துள்ளது. மெக்சிகோவுக்கான ஐக்கிய அமெரிகாவின் தூதரால் செய்யப்பட்ட உதவிகளும் உடண்படிக்கையும் இப்போரினால் முறிந்தது.
திருத்தந்தை பதினொன்றாம் பயஸின் கவனத்தை ஈர்த்த இப்போரானது அவரை 1925 முதல் 1937 வரை பல சுற்று மடல்களை எழுதத்தூண்டியது. 11 டிசம்பர் 1925இல் திருத்தந்தை கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழாவினை நிருவினார்.
நவம்பர் 18, 1926 தனது Iniquis Afflictisque (On the Persecution of the Church in Mexico) என்னும் சுற்றுமடலில் மெக்சிக்கோ அரசின் செயல்களை கண்டித்தார்.[2] செப்டம்பர் 29, 1932 மீண்டும் Acerba Animi என்னும் மடலின் மூலம் கண்டித்தார்.[2][3] ஆயினும் கத்தோலிக்கர்களை கொடுமைப்படுத்துவது நிற்காததினால் 28 மார்ச் 1937இல் மூன்றாம் முரையாக தனது Firmissimam Constantiam என்னும் சுற்றறிக்கையில் கண்டித்து இவ்வாட்சியினை எதிர்த்து கத்தோலிக்க மரபில் நிலைப்பவருக்கு நிறைவு பலன்களை வழங்கினார்.[4]
இப்போரினை மையமாக வைத்து For Greater Glory என்னும் வரலாற்றுப்படம் ஜூன் 1, 2012இல் வெளியானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Luis González (John Upton translator), San Jose de Gracia: Mexican Village in Transition (University of Texas Press, 1982), p. 154
- ↑ 2.0 2.1 Philippe Levillain The Papacy: An Encyclopedia p. 1208, 2002 Routledge
- ↑ "Acerba Animi". Archived from the original on 2010-07-02. பார்க்கப்பட்ட நாள் 2013-09-23.
- ↑ Pope Pius XI (1937). Firmissimam Constantiam. Libreria Editrice Vaticana.