கிறுகிறு மாம்பழம் (விளையாட்டு)
(கிறுகிறு மாம்பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிறுகிறு மாம்பழம் என்பது சிறுவர்கள் தம்மைத்தாமே சுற்றிக்கொண்டு மகிழும் ஓர் உல்லாச விளையாட்டு. ஒவ்வொருவரும் தம் கைகளைத் தோளுக்கு நேரே பக்கவாட்டில் நீட்டிக்கொண்டு சுழல்வர். கிறுகிறு எனத் தலையைச் சுற்றுவது போன்று வரும் உணர்ச்சி இன்பத்தில் திளைப்பது ஒருவகைச் சுவை.
சுற்றும்போது கிறு கிறு என வந்தால் உட்கார்ந்து இன்பம் காண்பர்.
சுற்றும்போது பாடும் பாடல்
- கிறு கிறு மாம்பழம்
- கிய்யா கிய்யா மாம்பழம்
திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டே சுழல்வர்
பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982