கில்மான் சோதனை
கில்மான் சோதனை என்பது (Gilman test) கிரிக்னார்டு வினைக்காரணிகள் மற்றும் ஆர்கனோலித்தியம் காரணிகள் ஆகியவற்றைக் கண்டறிவதற்கான வேதியியல் சோதனையாகும்.[1][2]
0.5 மிலி மாதிரியானது, பென்சீன் அல்லது தொலுயீனில் உள்ள மிசுலெரின் கீட்டோனின் 1% கரைசலுடன் சேர்க்கப்படுகிறது. இந்தக் கரைசலுடன் 1 மிலி நீரானது நீராற்பகுத்தலுக்காகச் சேர்க்கப்படுகிறது. பிறகு பல சொட்டுகள் பனிக்கட்டிையை ஒத்த அசிட்டிக் அமிலத்தில் உள்ள 0.2% அயோடின் கரைசலானது சேர்க்கப்படுகிறது. இதன் விளைவாக உருவாகும் கரைசலின் நிறமானது பசுமை கலந்த நீல நிறமாக மாறினால் சோதிக்கப்பட வேண்டிய மாதிரியானது கரிம உலோக வேதிப்பொருளைக் கொண்டிருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Henry Gilman and F. Schulze (1925). "A qualitative color test for the Grignard reagent". J. Am. Chem. Soc. 47 (7): 2002–2005. doi:10.1021/ja01684a032.
- ↑ "Cyclohexylcarbinol". Organic Syntheses. 1941. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv1p0188.; Collective Volume, vol. 1, p. 188