கிளமிடமொனாசு

கிளமிடமொனாசு
கிளமிடமொனாசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Chlamydomonas

இனங்கள்

See text

கிளமிடமொனாசு (Chlamydomonas) எளிய ஒரு கலத்தாலான பச்சை அல்காத் தாவரமாகும். இந்த அல்கா நிலையான நன்னீரிலும் குளங்களிலும் ஈரமண்ணிலும் காணப்படும். சவுக்குமுளைகளைப் பயன்படுத்தி தானாக நீந்திச் செல்லும் ஆற்றலுள்ளது. ஒளியால் கட்டுப்படுத்தக்கூடிய அயன்களைப் பம்பும் முறை இவற்றிலுள்ள ஒரு சிறப்பான அமைப்பாகும்.

இனங்கள்

தொகு
 

கிளமிடமொனாசு அமோனியம் உப்பு உள்ள இடங்களில் அதிகமாக வளரும். இவை இலிங்க மற்றும் இலிங்கமில் முறைகளால் இனப்பெருக்கமடையும்.

உணவு பெறும் முறை

தொகு

கூடுதலான கிளமிடமொனாசுகள் தனியே ஒளித்தொகுப்பால் மாத்திரம் உணவுத் தெவையைப் பூர்த்தி செய்து கொள்ளும். எனினும் C. dysosmos மற்றும் C. reinhardtii ஆகியவை இரு முறைகளில் தெவையைப் பூர்த்தி செய்து கொள்ளும்: ஒளியுள்ள போது ஒளித்தொகுப்பாலும், ஒளியற்ற போது அசிடேட் மூலமும்.

உருவவியல்

தொகு
  • அசையக் கூடிய ஒரு கல அல்கா
  • பொதுவாக நீள் வட்ட வடிவமானது.
  • கிளைக்கோ புரதத்தாலும் செலுல்லோசு அல்லாத ஏனைய மாப்பொருளாலுமான கலச்சுவர்.
  • இரண்டு சவுக்குமுளை]கள்
  • சவுக்குமுளை]களின் அடியருகே இருக்கும் சுருங்கத்தக்க புன்வெற்றிடங்கள்.
  • பாத்திர வடிவான பச்சையுருவங்களைக் கொண்டிருக்கும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளமிடமொனாசு&oldid=2186251" இலிருந்து மீள்விக்கப்பட்டது