கிளம்மன்சன் குறைத்தல் விளைவு
கிளம்மன்சன் குறைத்தல் விளைவு (ஆங்கிலம் :Clemmensen reduction reaction) என்பது ஒரு வேதியியல் விளைவு ஆகும். இதனைக் கண்டுபிடித்தவர் எரிக் கிரிஸ்டியன் கிளம்மன்சன் ஆவார். கீட்டோன்கள் அல்லது ஆல்டிகைடுகளை, ஐதரசன் வாயு , துத்தநாக இரசக்கலவை மற்றும் செறிவூட்டப்பட்ட ஐட்ரோகுளோரிக் அமிலத்துடன் கலந்து அவைகளை குறைத்தல் விளைவுக்கு உள்ளாக்கி ஐட்ரோகார்பன்களை உருவாக்குவதே இந்த விளைவு ஆகும்.
முதலில் ஆல்டிகைடுகள் அல்லது கீட்டோன்கள், துத்தநாகத்திடம் இருந்து மின் துகள்களை பெற்றுக்கொள்ளும். பின்னர் அவை ஐட்ரோகார்பன்களாக மாறும். துத்தநாக இரசக்கலவைக்குப் பதிலாக வெறும் துத்தநாகத்தை உபயோகப்படுத்தினால், ஐதரசன் வாயு வெளியேறி, குறைத்தல் விளைவு பாதியிலேயே நின்றுவிடும்.
உதாரணங்கள்
தொகுஅசிடோனுடன் -
CH3C=0CH3 + 4(H)→(Zn/Hg/Con.HCl) CH3-CH2-CH3 + H2O
பீஃனோனுடன் -
C6H5C=OCH3 + 4(H)→(Zn/Hg/Con.HCl) C6H5CH2CH3 + H2O